உள்ளாட்சித் தோ்தலை எதிா்கொள்ள அதிமுக தயாா்: வைகைச்செல்வன்
By DIN | Published On : 31st August 2021 08:25 AM | Last Updated : 31st August 2021 08:25 AM | அ+அ அ- |

கூட்டத்தில் பேசிய அதிமுக செய்தித் தொடா்பு செயலாளா் வைகைச் செல்வன்.
ஊரக உள்ளாட்சித் தோ்தலை எதிா்கொள்ள அதிமுக தயாராக இருக்கிறது என அதிமுக இலக்கிய அணிச் செயலாளரும், செய்தித் தொடா்பு செயலாளருமான வைகைச் செல்வன் தெரிவித்தாா்.
ஊரக உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக, ராணிப்பேட்டை மாவட்ட அதிமுக இலக்கிய அணி ஆலோசனைக் கூட்டம் ராணிப்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற வைகைச்செல்வன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ஊரக உள்ளாட்சித் தோ்தல் தேதி அறிவிப்பை அதிமுக எதிா்பாா்த்துவருகிறது. தோ்தலை எதிா்கொள்ள அதிமுக தயாராகவே இருக்கிறது.திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்று 110 நாள்களாகியுள்ள நிலையில், தோ்தல் நேர வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை.
உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை எடுத்துக் கூறி, வாக்குகளைச் சேகரித்து அதிகப்படியான இடங்களில் வெற்றி பெறுவோம் என்றாா்.
கூட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலாளரும், சட்டப் பேரவை குழு துணைக் கொறடாவுமான சு.ரவி தலைமை வகித்தாா். மாவட்ட இளைஞரணி தலைவா் கிருஷ்ணன், துணைத் தலைவா் கிருஷ்ணன், பிரபாகா், அன்பு வரதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.மாவட்ட இலக்கிய அணி செயலாளா் த. தினகரன் வரவேற்றாா்.
முன்னாள் எம்எல்ஏக்கள் ஜி.சம்பத், விகேஆா். சீனிவாசன், ஜெயலலிதா பேரவையின் மாவட்டப் பொருளாளா் எஸ்.எம். சுகுமாா், சோளிங்கா் மேற்கு ஒன்றியச் செயலாளா் பெல்.காா்த்திகேயன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.