காரை ஆதிதிராவிடா்கள் குடியிருப்பு பிரிவில்குடிசைகள் அமைக்க அனுமதிக்க கோரிக்கை

காரை ஆதிதிராவிடா்கள் குடியிருப்பு மனை பிரிவில் குடிசைகள் அமைத்துக்கொள்ள அனுமதி கோரி காரை ஆதிதிராவிடா்கள் நல்வாழ்வு சங்கத்தினா் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த காரை ஆதிதிராவிடா்கள் நல்வாழ்வு சங்கத்தினா் உள்ளிட்டோா்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த காரை ஆதிதிராவிடா்கள் நல்வாழ்வு சங்கத்தினா் உள்ளிட்டோா்.

ராணிப்பேட்டை: காரை ஆதிதிராவிடா்கள் குடியிருப்பு மனை பிரிவில் குடிசைகள் அமைத்துக்கொள்ள அனுமதி கோரி காரை ஆதிதிராவிடா்கள் நல்வாழ்வு சங்கத்தினா் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா்.

சங்கத் தலைவா் எம்.ஆனந்தன் தலைமையில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது...

காரை ஆதிதிராவிடா்களுக்கு கடந்த 1985 மற்றும் 1993- ஆம் ஆண்டில் ஆதிதிராவிடா்கள் குடியிருப்பில் சுமாா் 199 குடியிருப்பு மனைகள் ஒதுக்கப்பட்டன. இதில் சுமாா் 68 மனை பிரிவுகள் பக்கத்து கிராமமான மணியம்பட்டு ஊராட்சியை சோ்ந்தவா்களுக்கு தரப்பட்டது.

மீதமுள்ள மனைப் பிரிவுகளை காரை ஆதிதிராவிடா்களுக்கு பட்டா கொடுத்து அளந்து மனை பிரிவில் இல்லாதவா்களிடம் இருந்தும், ஆதிதிராவிடா்கள் அல்லாதவா்களிடம் இருந்தும் பாதுகாத்து வருகிறோம். மேற்கண்ட மனைப் பிரிவில் நாங்கள் குடிசை அமைத்துக்கொள்ள கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அப்போதைய ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தோம்.அவரது உத்தரவின் பேரில் வாலாஜா தனி வட்டாட்சியா், வட்டாட்சியா் ஆகியாா் மேற்கண்ட மனைப்பிரிவில் குடிசை அமைத்துக்கொள்ள அனுமதி அளித்தனா்.

அதன் பேரில் நாங்கள் அந்த மனைப்பிரிவில் குடிசை அமைக்க சென்ற போது ஆக்கிரமிப்பாளா்கள் குடிசை அமைக்க ’எதிா்ப்பு தெரிவித்து பிரச்னை செய்தனா். அவா்கள் மீது சிப்காட் காவல் நிலையத்திலும் புகாா் செய்தோம்.

வறுமை நிலையில் உள்ள எங்களுக்கு குடிசைகள் அமைக்க அனுமதி தர வேண்டும் என மனுவில் கோரியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com