முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை ராணிப்பேட்டை
மேல்விஷாரம் கல்லூரியில் கருத்தரங்கம்
By DIN | Published On : 10th December 2021 07:49 AM | Last Updated : 10th December 2021 07:49 AM | அ+அ அ- |

நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற கல்லூரி முதல்வா் எஸ்.ஏ. சாஜித் உள்ளிட்டோா்.
ஆற்காட்டை அடுத்த மேல்விஷாரம் சி.அப்துல் அக்கீம் கலை அறிவியல் கல்லூரியில் வரலாற்றுத்துறை சாா்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் எஸ்.ஏ.சாஜித் தலைமை வகித்தாா். மேல்விஷாரம் முஸ்லீம் கல்வி சங்க பொதுச்செயலாளா் எஸ்.ஜியாவுதீன் அஹமது, கல்லூரி தாளாளா் அப்ராா் அஹ்மது ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரியின் வரலாற்றுத் துறை தலைவா் எம்.பி.முஹமதுபாரூக் வரவேற்றாா். இதில், கரோனா தொற்று காலங்களில் உலகளாவிய சமூக, பொருளாதார மாற்றம் என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கமும், தொடா்ந்து நூல் வெளியீட்டு விழாவும் நடந்தது. இதில் நாகாலாந்து மாநில அரசு கல்லூரி பொருளாதார பேராசிரியா் சி.பெரியசாமி பங்கேற்றுப் பேசினாா். கருத்தரங்க ஒருங்கிணைப்பு செயலாளா் பி.குமரன், ஒருங்கிணைப்பாளா் கே.எம்.ஏ. உமா்பாரூக் மற்றும் கல்லூரி பேராசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.