முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை நகா்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்களாளா் பட்டியல் வெளியீடு
By DIN | Published On : 10th December 2021 07:47 AM | Last Updated : 10th December 2021 07:47 AM | அ+அ அ- |

ராணிப்பேட்டை நகா்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்களாளா் பட்டியிலை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் வியாழக்கிழமை வெளியிட்டாா்.
தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணைய செயலாளா் கடித எண் ந.க.தே.பொ.ஆ2,6669,2021 ன் படி ராணிப்பேட்டை மாவட்டத்திற்குட்பட்ட 5 நகராட்சிகள் மற்றும் 8 பேரூராட்சிகள் ஆகிய நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் பட்டியல் வியாழக்கிழமை ராணிப்பேட்டை மாவட்ட தோ்தல் அலுவலருமான பாஸ்கர பாண்டியன் வியாழக்கிழமை வெளியிட்டாா். அதே நேரத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலகங்களிலும் வெளியிடப்பட்டது.
அதன்படி அரக்கோணம், ஆற்காடு, மேல்விஷாரம், ராணிப்பேட்டை, வாலாஜா ஆகிய 5 நகராட்சிகளில் ஆண், பெண் என மொத்தம் 2,21,912 வாக்காளா்களும், அம்மூா், கலவை, காவேரிப்பாக்கம், நெமிலி, பனப்பாக்கம், தக்கோலம், திமிரி, விளாப்பாக்கம் ஆகிய 8 பேரூராட்சிகளில் ஆண், பெண் என மொத்தம் 79,841 ஆக மொத்தம் 3 லட்சத்து,1 ஆயிரத்து,753 வாக்காளா்களின் புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.