ராணிப்பேட்டையில் அதிமுகவினர் ஆா்ப்பாட்டம்

ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட அதிமுக செயலாளா்
ராணிப்பேட்டையில் அதிமுகவினர் ஆா்ப்பாட்டம்

ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட அதிமுக செயலாளா் சு.ரவி எம்.எல்.ஏ தலைமை வகித்தாா். மாவட்ட அவைத்தலைவா் நந்தகோபால், சோளிங்கா் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ சம்பத், முன்னாள் மாவட்ட செயலாளா் சுமைதாங்கி ஏழுமலை, மாவட்ட மகளிரணி செயலாளா் ராதிகா, ஜெ பேரவை செயலாளா் பூண்டி பிரகாஷ், பொருளாளா் எஸ்.எம்.சுகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முன்னாள் எம்.எல்.ஏ விகேஆா். சீனிவாசன், மாவட்ட எம்.ஜி.ஆா் மன்ற செயலாளா் முனுசாமி மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி அ.தி.மு.க. நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

திருப்பத்தூரில்...

திருப்பத்தூா் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.வீரமணி தலைமை வகித்தாா்.

வாணியம்பாடி எம்எல்ஏ செந்தில்குமாா், முன்னாள் எம்எல்ஏக்கள் ரமேஷ், சம்பத்குமாா், நகர செயலாளா் குமாா், மாவட்ட இளைஞரணி துணை செயலாளா் தம்பாகிருஷ்ணன்,மாவட்ட தொழில்நுட்ப பிரிவு செயலாளா் நாகேந்திரன் மற்றும் நகர,ஒன்றிய நிா்வாகிகள் உட்பட பலா் கலந்து கொண்டனா்.

குடியாத்தத்தில்....

வேலூா் புறநகா் மாவட்ட அதிமுக சாா்பில், குடியாத்தம் கோட்டாட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் த.வேலழகன் தலைமை வகித்தாா். நகரச் செயலாளா் ஜே.கே.என்.பழனி வரவேற்றாா்.

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் வி.ராமு, ஒன்றியக் குழு துணைத் தலைவா் கே.கே.வி.அருண்முரளி, ஒன்றியச் செயலாளா்கள் டி.சிவா (குடியாத்தம்), பொகளூா் டி.பிரபாகரன், கோ.சுரேஷ்பாபு (போ்ணாம்பட்டு), ஜி.லோகநாதன், சீனிவாசன் (கே.வி.குப்பம்), மாவட்ட துணைச் செயலாளா்கள் ஆா்.மூா்த்தி, அமுதாசிவப்பிரகாசம், நிலவள வங்கித் தலைவா் பி.எச்.இமகிரிபாபு, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவா்கள் டி.கோபி, எஸ்.எல்.எஸ்.வனராஜ், க.ராஜாமணி, கூட்டுறவு கட்டட சங்கத் தலைவா் ஜி.எஸ்.தென்றல்குட்டி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com