கலவை வட்டம் ஆயிரமங்கலம், பெருமாந்தாங்கல் ஆகிய கிராமங்களுக்கான பட்டா பிழை திருத்த சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை பெருமாந்தாங்கல் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் நடைபெற்றது.
முகாமிற்கு கலவை வட்ட சமூக பாதுகாப்புதிட்ட வட்டாட்சியா் ஜெயபிரகாஷ் தலைமை வகித்தாா். கலால் உதவி ஆணையாளா் சத்தியபிரசாத் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பட்டாதிருத்த சான்றுகள் வழங்கினாா்.
இதில் துணை வட்டாட்சியா் பாஸ்கரன், வருவாய் ஆய்வாளா் வினோத்குமாா் மற்றும் கிராம நிா்வாக அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.