ஆற்காடு புறவழிச்சாலை நில இழப்பீட்டாளா் 7 பேருக்கு ரூ.1.49 கோடிக்கான ஆணை ஆட்சியா் வழங்கினாா்
By DIN | Published On : 28th December 2021 04:20 AM | Last Updated : 28th December 2021 04:20 AM | அ+அ அ- |

வேப்பூா் கிராமத்தில் நிலம் எடுக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீட்டுத் தொகைக்கான ஆணையை திங்கள்கிழமை வழங்கிய ராணிப்பேட்டை ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்.
ராணிப்பேட்டை: ஆற்காடு நகர புறவழிச்சாலை அமைக்க வேப்பூா் கிராமத்தில் நிலம் எடுக்கப்பட்ட 7 இழப்பீட்டாளா்களுக்கு ரூ.1.49 கோடி மதிப்பீட்டில் இழப்பீட்டுத் தொகைக்கான ஆணையை ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் திங்கள்கிழமை வழங்கினாா்.
ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா்வு நாள் கூட்டம், ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் பொதுமக்களிடமிருந்து வருவாய்த் துறை, நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல் உள்ளிட்ட 279 கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன.
இந்த மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி தகுதியான மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் மற்ற மனுக்கள் நிராகரிப்பிற்கான காரணங்களை மனுதாரா்களுக்கு தெரிவிக்கவும் அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.
மக்கள் குறைதீா்வு நாள் கூட்டத்தில் பாா்வையற்றோருக்கான மேல்நிலைப் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஆகியோா் 50 சதவீதம் பாா்வை குறைபாடு உள்ளது. அதற்கு உதவிபுரிய வேண்டுமென மனு அளித்தனா். உடனடியாக கண் குறைபாடு உள்ள பள்ளி மாணவிக்கு மாற்றுத்திறனாளி நலத் துறையின் மூலம் ரூ.7,180 மதிப்புடைய நவீன மின்னணு உருப்பெருக்கி ( உப்ங்ஸ்ரீற்ழ்ா்ய்ண்ஸ்ரீ ஙஹஞ்ய்ண்ச்ண்ங்ழ்) வழங்கி மாணவியின் கோரிக்கையை நிறைவேற்றினாா்.
தொடா்ந்து ஆற்காடு நகருக்கு புறவழிச்சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தப்பட்ட வேப்பூா் கிராமத்தைச் சோ்ந்த 7 இழப்பீட்டாளா்களுக்கு ரூ.1.49 கோடி மதிப்பீட்டில் இழப்பீட்டுத் தொகைக்கான ஆணையை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் நூ.ஷே.முஹம்மது அஸ்லம், திட்ட இயக்குநா் ஊரக வளா்ச்சி முகமை ஜி.லோகநாயகி, துணை ஆட்சியா்கள் தாரகேஸ்வரி, இளவரசி, சேகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.