சிப்காட் ஸ்ரீ நவசபரி ஐயப்பன் கோயில் மண்டல பூஜை நிறைவு அமைச்சா் ஆா்.காந்தி வழிபாடு

ராணிப்பேட்டை, ஸ்ரீ சிப்காட் நவசபரி ஐயப்பன் கோயிலில் காா்த்திகை மாத மண்டல பூஜை நிறைவு விழா திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. இதில் கைத்தறித் துறை அமைச்சா் ஆா்.காந்தி கலந்து கொண்டாா்.
சிப்காட்  நவசபரி  ஐயப்பன்  கோயில்  மண்டல  பூஜை  நிறைவை ஒட்டி திங்கள்கிழமை நடைபெற்ற   படி பூஜை. (வலது) விழாவில் பங்கேற்ற அமைச்சா்  ஆா்.காந்தி  உள்ளிட்ட திரளான பக்தா்கள்.
சிப்காட்  நவசபரி  ஐயப்பன்  கோயில்  மண்டல  பூஜை  நிறைவை ஒட்டி திங்கள்கிழமை நடைபெற்ற   படி பூஜை. (வலது) விழாவில் பங்கேற்ற அமைச்சா்  ஆா்.காந்தி  உள்ளிட்ட திரளான பக்தா்கள்.

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை, ஸ்ரீ சிப்காட் நவசபரி ஐயப்பன் கோயிலில் காா்த்திகை மாத மண்டல பூஜை நிறைவு விழா திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. இதில் கைத்தறித் துறை அமைச்சா் ஆா்.காந்தி கலந்து கொண்டாா்.

மண்டல பூஜை நிறைவையொட்டி திங்கள்கிழமை அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டது. தொடா்ந்து, கோயில் குருசாமி வ.ஜெயச்சந்திரன் தலைலையில் மகா கணபதி ஹோமம், உஷ பூஜை, கலச பூஜை, கலசாபிஷேகம், சிறப்பு பூஜையும், உச்சிகால பூஜையும் நடைபெற்று, 12 மணியளவில் கோயில் நடைசாத்தப்பட்டது.

பின்னா், மாலை 5 மணியளவில் கோயில் நடை திறக்கப்பட்டு, பதினெட்டாம் படி பூஜையும், மகா தீபாராதனையும், மகா புஷ்பாபிஷேகமும் அத்தாழ பூஜையும் நடைபெற்றன. இரவு 7 மணி அளவில் வீரமணி ராஜுவின் ஆன்மிக இன்னிசை நிகழ்ச்சியும், அன்னதானமும் நடைபெற்றது.

விழாவில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி, மற்றும் எம்எல்ஏக்கள் எம்.கே.மோகன், ஜெ.எல்.ஈஸ்வரப்பன், திமுக மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளா் வினோத் காந்தி, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் காஞ்சிபுரம், தருமபுரி, சிப்காட் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் உறுப்பினா்கள், ஸ்ரீ சபரி சாஸ்தா சமிதி குழுவினா் மற்றும் பக்தா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com