முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை ராணிப்பேட்டை
பொதுமக்களிடம் நாளை மனுக்களை பெறுகிறாா் அமைச்சா் ஆா்.காந்தி
By DIN | Published On : 29th December 2021 12:00 AM | Last Updated : 29th December 2021 12:00 AM | அ+அ அ- |

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களுக்கு நிலவும் பொதுவான பிரச்னைகள், நீண்ட காலம் நிலுவையில் இருந்து வரும் பிரச்னைகள், அரசு நலத்திட்ட உதவிகள் கிடைப்பதில் நிலவும் பிரச்னைகள் குறித்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வியாழக்கிழமை (டிச. 30) காலை முதல் மாலை வரை கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி நேரடியாக பெற உள்ளாா்.
அரக்கோணம் நகராட்சியில் இரு இடங்களிலும், தக்கோலம், நெமிலி, பனப்பாக்கம், காவேரிபாக்கம், சோளிங்கா், அம்மூா் ஆகிய பேரூராட்சிகளிலும் அவா் பெறவுள்ளதாக ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளாா்.