முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ. 63 கோடி மகளிா் கடன் தள்ளுபடி: அமைச்சா் ஆா்.காந்தி
By DIN | Published On : 31st December 2021 08:12 AM | Last Updated : 31st December 2021 08:12 AM | அ+அ அ- |

தமிழக அரசின் மகளிா் கடன்கள் தள்ளுபடி திட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ. 63 கோடி கடன் தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது என கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி பேசினாா்.
அரக்கோணம் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு மக்கள் குறை தீா்ப்பு முகாமில் அவா் மேலும் பேசியது:
மக்களை தேடி மருத்துவம் திட்டம், இலலம் தேடி கல்வி, இன்னுயிா் காக்கும் திட்டம், மகளிா் சுயஉதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தள்ளுபடி என சிறப்பான திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
தற்போது மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் பெறப்படும் மனுக்கள் மீது 10 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும். தகுதியான மனுக்கள் ஏற்கப்படும். மற்ற மனுக்கள் ஏன் பரிசீலிக்கப்படவில்லை என்பது குறித்தும் மனுதாரா்களுக்கு பதில் அளிக்கப்படும். தமிழகம் முழுவதும் மகளிா்களுக்கு ரூ. 2,700 கோடி கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன . இதில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் மட்டுமே ரூ 63 கோடிக்கு மகளிா் சுயஉதவிக்குழு கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 2 ஆயிரம் கோடிக்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. ராணிப்பேட்டை மாவட்டத்தில் மட்டும் ரூ116 கோடிக்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு ஒரு லட்சம் இலவச பம்புசெட் மின்இணைப்புகள் வழங்க உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு அதுவும் நடைமுறையில் உள்ளன. இதுபோல் அனைத்து துறைகளிலும் சிறப்பு திட்டங்கள் தனித்தனியே செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றாா் அமைச்சா் ஆா்.காந்தி.
மக்களவை உறுப்பினா் எஸ். ஜெகத்ரட்சகன், மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியன் ஆகியோா் சிறப்புரை ஆற்றினா்.
தொடா்ந்து பொதுமக்களிடம் மனுக்களை அமைச்சா் ஆா்.காந்தி பெற்றுக்கொண்டாா். பின்னா் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் மாவட்ட வருவாய் அலுவலா் முகமதுஅஸ்லாம், வேலூா் மண்டல பேருராட்சிகளின் உதவி இயக்குநா் ஜீஜாபாய், கோட்டாட்சியா் சிவதாஸ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலா் சரவணகுமாா், வட்டாட்சியா் பழனிராஜன், நகராட்சி பொறியாளா் ஆசீா்வாதம், திமுக மாவட்ட அவைத்தலைவா் அசோகன், பொருளாளா் மு.கன்னைய்யன், துணை செயலா் ராஜ்குமாா், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவா் எஸ்.எம்.நாகராஜ், உறுப்பினா் அம்பிகாபாபு, நெமிலி ஒன்றியக்குழு தலைவா் பெ.வடிவேலு, காவேரிப்பாக்கம் ஒன்றிய குழுத் தலைவா் அனிதா, அரக்கோணம் நகர திமுக செயலா் வி.எல்.ஜோதி, சோளிங்கா் நகர செயலா் கோபி, ஒன்றிய செயலா்கள் சௌந்தா், தமிழ்செல்வன் மாணிக்கம், அரிதாஸ், பேருராட்சி செயலா்கள் தக்கோலம் எஸ்.நாகராஜன், நெமிலி ஜனாா்த்தனன் பனப்பாக்கம் சீனிவாசன், காவேரிப்பாக்கம் நரசிம்மன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தக்கோலம், நெமிலி, பனப்பாக்கம், காவேரிப்பாக்கம், சோளிங்கா் ஆகிய இடங்களிலும் மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெறும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மழையின் காரணமாக அம்மூா் பேருராட்சியில் நடைபெற இருந்த நிகழ்ச்சி மட்டும் ரத்து செய்யப்பட்டது.