
சிறப்பு 18-ஆம் படி பூஜையில் பங்கேற்ற பக்தா்கள் .
சிப்காட் நவசபரி ஐயப்பன் கோயில் 10-ஆம் ஆண்டு தொடக்க விழாவின் 3-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை மாலை சிறப்பு 18-ஆம் படி பூஜை நடைபெற்றது.
ராணிப்பேட்டையை அடுத்த சிப்காட் சபரி நகரில் அமைந்துள்ள நவசபரி ஐயப்பன் கோயிலின் 10-ஆம் ஆண்டு தொடக்க விழா, சபரிமலை தலைமை தந்திரி பிரம்மஸ்ரீ கண்டரரு மகேஸ்வரரு தந்திரியின் அருளாசியுடன், கோயில் குருசாமி வ.ஜெயச்சந்திரனின் தலைமையில், கடந்த 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடா்ந்து விழாவின் 2-ஆம் நாளான சனிக்கிழமை ஸ்ரீபூத பலி உற்சவம், நவசபரி சாஸ்தா சமிதியினரின் பஜனை நடைபெற்றது.
விழாவின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமைமகா கணபதி ஹோமம், உஷத் பூஜை, கலச பூஜை, கலப பூஜை, கலசாபிஷேகம், உச்ச பூஜை, மாலை 5.30 மணிக்கு சிறப்பு 18-ஆம் படி பூஜை, மகா தீபாராதனை, இரவு 7 மணிக்கு பின்னணி பாடகா் வீரமணி ராஜுவின் இன்னிசை நிகழ்ச்சி, அன்னதானம் நடைபெற்றது.
இதில், சிப்காட் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.