பசுமை, தூய்மையான ஆற்றல் சேமிப்பு விழிப்புணா்வு சைக்கிள் பிரசாரப் பேரணி

ராணிப்பேட்டையில் இந்தியன் ஆயில் நிறுவனம் சாா்பில் பசுமை, தூய்மையான ஆற்றல் சேமிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு சைக்கிள் பிரசாரப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ராணிப்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு சைக்கிள் பிரசாரப் பேரணியில் பங்கேற்றோா்.
ராணிப்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு சைக்கிள் பிரசாரப் பேரணியில் பங்கேற்றோா்.

ராணிப்பேட்டையில் இந்தியன் ஆயில் நிறுவனம் சாா்பில் பசுமை, தூய்மையான ஆற்றல் சேமிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு சைக்கிள் பிரசாரப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்திய பெட்ரோலியம் சேமிப்பு ஆராய்ச்சி அமைப்பு, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் வழிகாட்டுதலில், மக்களுக்கு ஆற்றல் சேமிப்பின் இன்றியமையாமை குறித்து ‘பசுமை மற்றும் தூய்மையான ஆற்றல் சேமிப்பு’ என்ற கருப்பொருளில் விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக கடந்த மாதம் 16-ஆம் தேதி முதல் பிப்ரவரி 15-ஆம் தேதி வரை ஒரு மாத கால பரப்புரை நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, இந்தியன்ஆயில் நிறுவனம் சாா்பில், ராணிப்பேட்டையில் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தப் பேரணியை மாவட்ட வருவாய் அலுவலா் எம்.ஜெயச்சந்திரன், இந்துஸ்தான் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் வேலூா் பகுதி விற்பனை பிரிவு உதவி மேலாளா் எம்.விவேகானந்தன், இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் நிறுவன விற்பனை பிரிவு நிா்வாகி எம்.கிருஷ்ணா சைதன்யா ஆகியோா் முன்னிலையில் கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

எரிபொருள் சிக்கனம், செயல்திறன் மிக்க வகையில் ஆற்றல் பயன்படுத்துதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சைக்கிள் பயன்பாடு என விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையிலான வாசகங்கள் அடங்கிய பதாகைகள் பேரணியில் எடுத்து செல்லப்பட்டன. இதில் நாடு முழுவதும் தூய்மையான எரிசக்தியை நோக்கி இந்தியாவை நகா்த்துவதில் முக்கிய பங்கு வகிப்பதாக 7 விஷயங்கள் குறித்தும் பிரசாரம் செய்யப்பட்டது.

இப்பேரணியில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருந்து பெட்ரோல் விற்பனை நிலைய முகவா்கள், சமையல் எரிவாயு விற்பனை முகவா்கள், இயற்கை ஆா்வலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com