ராணிப்பேட்டையில் ஆதரவற்ற குழந்தைகளை மீட்க ’புன்னகையைத் தேடி’ வாகனம் தொடக்கம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆதரவற்ற குழந்தைகளை மீட்டெடுத்து மறுவாழ்வு அளிக்க "புன்னகையை தேடி"  மீட்புக் குழு வாகனத்தை மாவட்ட ஆட்சியர் ஏ.ஆர்.கிளாஸ்டன் புஷ்பராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார். 
ராணிப்பேட்டையில் ஆதரவற்ற குழந்தைகளை மீட்க ’புன்னகையைத் தேடி’ வாகனம்
ராணிப்பேட்டையில் ஆதரவற்ற குழந்தைகளை மீட்க ’புன்னகையைத் தேடி’ வாகனம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆதரவற்ற குழந்தைகளை மீட்டெடுத்து மறுவாழ்வு அளிக்க "புன்னகையை தேடி"  மீட்புக் குழு வாகனத்தை மாவட்ட ஆட்சியர் ஏ.ஆர்.கிளாஸ்டன் புஷ்பராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார். 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை பொது இடங்களில் பிச்சை எடுக்கும் குழந்தைகள், காணாமல் போன குழந்தைகள், குழந்தை தொழிலாளர்கள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளை மீட்டெடுத்து மறுவாழ்வு அளிக்கும் வகையில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், மாவட்ட காவல் துறை, தொழிலாளர் துறை மற்றும் சைல்டு லைன் ஆகியோர் கொண்ட குழுவினரால் " புன்னகையை தேடி" என்ற மீட்புக் குழு வாகனத்தை,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆ.மயில் வாகனன் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் ஏ.ஆர்.கிளாஸ்டன் புஷ்பராஜ் செவ்வாய்க்கிழமை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது இடங்களில் பிச்சை எடுக்கும் குழந்தைகள்,காணாமல் போன குழந்தைகள், குழந்தை தொழிலாளர்கள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளை மீட்டெடுத்து மறுவாழ்வு அளிக்கப்பட உள்ளது.

இதற்கென்று மாவட்ட அளவில் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் இடம்பெற்றுள்ள துறை சார்ந்த பணியாளர்கள் தெருவோரங்களில், கோயில்களில், பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் பிச்சை எடுக்கும் குழந்தைகளை திடீர் ஆய்வு மூலம் கண்டறியப்பட்டு மீட்டு பெற்றோர் அல்லது குழந்தைகள் இல்லத்தில் மறு வாழ்வுக்காக சேர்க்கப்படுவார்கள்.

அதே போல் குழந்தைகள் இல்லங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டு அவ்விடங்களில் முற்றிலும் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் வெளி மாநிலத்தைச் சேர்ந்த குழந்தைகளை கண்டறிந்து அவர்களை மீண்டும் பெற்றோர் அல்லது உரிய நபரிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கண்ணன் ராதா, குழந்தை தொழிலாளர் துறை  தடுப்பு திட்ட அலுவலர் ராஜபாண்டியன், குழந்தைகள் நலக்குழும தலைவர் சிவகலைவாணன், சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் தேவேந்திரன் மற்றும் குழந்தைகள் இல்ல கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com