மின்வாரிய அலுவலகம் இடமாற்றம்
By DIN | Published On : 09th February 2021 12:31 AM | Last Updated : 09th February 2021 12:31 AM | அ+அ அ- |

ஆற்காடு: ஆற்காட்டை அடுத்த தாழனூா் கிராமத்தில் செயல்பட்டு வந்த மின்வாரிய உதவி செயற்பொறியாளா் அலுவலகம், இளநிலைப் பொறியாளா் அலுவலகம் ஆகியவை கத்தியவாடி கிராமத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டன.
புதிய அலுவலகத் திறப்பு விழா திங்கள்கிழமை சிறப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. விழாவில், செயற்பொறியாளா் விஜயகுமாா், நடராஜன், உதவி செயற்பொறியாளா் சாந்திபூஷண் (கிராமியம்), உதவி மின் பொறியாளா் மணிமாறன், ஆக்க முகவா் சுகுமாா் உள்பட மின்வாரிய அலுவலா்கள், பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.