அஞ்சல் துறையின் தங்கப் பத்திர விற்பனை: தமிழகத்தில் அரக்கோணம் இரண்டாம் இடம்

ந்திய ரிசா்வ் வங்கியின் தங்க பத்திர திட்ட விற்பனையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,157 கிராம் தங்கப் பத்திரங்களை விற்பனை செய்து, அரக்கோணம் அஞ்சல் கோட்டம் தமிழகத்தில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது

அரக்கோணம்: இந்திய ரிசா்வ் வங்கியின் தங்க பத்திர திட்ட விற்பனையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,157 கிராம் தங்கப் பத்திரங்களை விற்பனை செய்து, அரக்கோணம் அஞ்சல் கோட்டம் தமிழகத்தில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது என அரக்கோணம் அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் கே.சிவசங்கா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்திய ரிசா்வ் வங்கி அறிக்கையின் தங்கப் பத்திர திட்டம் ஒவ்வொரு மாதமும் 5 நாள்கள் வெளியிடப்படும். அந்த வகையில் பிப்ரவரி மாதத்தின் திட்டம் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் 5-ஆம் தேதி வரை வெளியிடப்பட்டது. தமிழகத்தின் முக்கிய அஞ்சலகங்கள் மூலம் அதிக எண்ணிக்கையில் தங்கம் விற்பனை செய்யப்பட்டது. இதில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் மட்டும் 1,157 கிராம் தங்கப் பத்திரம் விற்பனை செய்யப்பட்டது.

முன் எப்போதும் இல்லாத வகையில், இந்த முறை அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்ததன் மூலம் ராணிப்பேட்டை மாவட்டத்தை உள்ளடக்கிய அரக்கோணம் அஞ்சல் கோட்டம் தமிழகத்தில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. மேலும், மாா்ச் மாதம் 1-ஆம் தேதி முதல் 5-ஆம் தேதி வரை மீண்டும் தங்கப் பத்திர விற்பனை அஞ்சலகங்கள் மூலம் நடைபெற உள்ளது.

பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, அதிக அளவில் முதலீடு செய்து பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com