ஆயிலம் அம்மன் கோயிலில் ஊஞ்சல் சேவை உற்சவம்
By DIN | Published On : 13th February 2021 07:50 AM | Last Updated : 13th February 2021 07:50 AM | அ+அ அ- |

தை அமாவாசையை முன்னிட்டு, ஆற்காட்டை அடுத்த ஆயிலம் கிராமத்தில் உள்ள ஸ்ரீமுத்தாலம்மன் கோயிலில் வியாழக்கிழமை இரவு ஊஞ்சல் சேவை உற்சவம் நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு கிராம தேவதை பொன்னியம்மன், முத்தாலம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. இரவு அலங்கரிக்கப்பட்ட உற்சவா் ஊஞ்சல் சேவை நடந்தது. இதில் உபயதாரா்கள் மற்றும் பொதுமக்கள் பலா் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.