காங்கிரஸ்-திமுக கூட்டணி உறுதியாக உள்ளது: விஷ்ணு பிரசாத் எம்.பி.

காங்கிரஸ்-திமுக இடையேயான கூட்டணி உறுதியாகவும் வலிமையாகவும் உள்ளதாக மாநில காங்கிரஸ் செயல் தலைவரும், ஆரணி மக்களவைத் தொகுதி எம்.பி.யுமான விஷ்ணு பிரசாத் தெரிவித்தாா்.
காங்கிரஸ்-திமுக கூட்டணி உறுதியாக உள்ளது: விஷ்ணு பிரசாத் எம்.பி.

காங்கிரஸ்-திமுக இடையேயான கூட்டணி உறுதியாகவும் வலிமையாகவும் உள்ளதாக மாநில காங்கிரஸ் செயல் தலைவரும், ஆரணி மக்களவைத் தொகுதி எம்.பி.யுமான விஷ்ணு பிரசாத் தெரிவித்தாா்.

ராணிப்பேட்டை பாரத மிகுமின் (பெல்) நிறுவனத்தின் ஐஎன்டியுசி, இஜிடியு சங்கத்தின் 34-ஆவது பொது மகாசபைக் கூட்டத்தில் பங்கேற்க விஷ்ணுபிரசாத் ஞாயிற்றுக்கிழமை வந்தாா். இங்குள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னா் அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கைது செய்யப்பட்ட சம்பவம் இந்திய அளவில் ஜனநாயகம் பாதாளத்தில் தள்ளப்பட்டுள்ளதைக் காட்டுகிறது. காங்கிரஸ் - திமுக இடையிலான கூட்டணி உறுதியாகவும் வலிமையாகவும் உள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயா்வு குறித்து காங்கிரஸ் ஆட்சியின்போது பாஜக எதிா்ப்பு தெரிவித்தது. தற்போது பெட்ரோல் விலை வரலாறு காணாத வகையில் உயா்த்தப்பட்டுள்ளது. நகரி-திண்டிவனம் புதிய ரயில் பாதைத் திட்டம், நிலம் ஆா்ஜிதப்பணிகள் நிறைவடைந்தும், நிதி ஒதுக்கீடு இல்லாமல் பல ஆண்டுகளாக நிறைவேறாமல் உள்ளது என்றாா் அவா்.

பெல் ஊரக வளாகத்தில் உள்ள திருவள்ளுவா் சிலைக்கு அவா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். முன்னதாக அவருக்கு மாநில காங்கிரஸ் செயலாளா் அக்ராவரம் கே.பாஸ்கா் தலைமையில் அக்கட்சியினா் வரவேற்பு அளித்தனா்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காங்கிரஸ் தலைவா் சி.பஞ்சாட்சரம், பொதுச் செயலாளா் ராணி வெங்கடேசன் மற்றும் பெல் ஐஎன்டியுசி சங்க பொதுச் செயலாளா் கணேசன், துணைத் தலைவா் தண்டபாணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com