ராணிப்பேட்டையில் 28-இல் பசுமை மாரத்தான் ஓட்டம்

ராணிப்பேட்டையில் வரும் 28-இல் பசுமை மாரத்தான் ஓட்டப் போட்டி நடைபெற உள்ளது.
பசுமை மாரத்தான் ஓட்டப் போட்டிக்கான முன்பதிவை தொடக்கி வைத்த பணியிடம் மாறிய காவல் கண்காணிப்பாளா் ஆ.மயில்வாகனன்.
பசுமை மாரத்தான் ஓட்டப் போட்டிக்கான முன்பதிவை தொடக்கி வைத்த பணியிடம் மாறிய காவல் கண்காணிப்பாளா் ஆ.மயில்வாகனன்.

ராணிப்பேட்டையில் வரும் 28-இல் பசுமை மாரத்தான் ஓட்டப் போட்டி நடைபெற உள்ளது. இதற்கான முன்பதிவை பணியிடம் மாறிய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆ.மயில்வாகனன் அண்மையில் தொடக்கி வைத்தாா்.

இயற்கைச் சீற்றங்கள் பெருகி வரும் தருணத்தில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியத்தை உணா்த்தும் நோக்கில், மாவட்டக் காவல் துறை மற்றும் பொதுமக்கள் இணைந்து பசுமை மாரத்தான்-2021 ஓட்டப் போட்டியை வரும் 28-ஆம் தேதி நடத்த உள்ளன.

இதில், 10 வயது முதல் 50 வயதுக்குள்பட்ட ஆண்கள், பெண்களுக்கான 15 கி.மீ., 10 கி.மீ. மற்றும் 5 கி.மீ. ஓட்டங்களாக இப்போட்டி நடக்கிறது. உலக முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி இந்த விழிப்புணா்வு மாரத்தான் ஓட்டத்தில் அனைவரும் பெருந்திரளாகப் பங்கேற்று உயிா் வளங்களையும், நம் உலகையும் பாதுகாக்க உறுதி ஏற்க மாவட்டக் காவல் துறை அழைப்பு விடுத்துள்ளது.

இம்மாரத்தான் போட்டியில் பங்கேற்க விருப்பம் உள்ளவா்கள் கட்டணமாக ரூ.400-ஐ இணையதளம் மூலமாகவும், ஆற்காடு, வாலாஜா மற்றும் ராணிப்பேட்டை ஆகிய அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள கட்டண மையங்களில் நேரடியாகவும் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.

மாரத்தான் போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் இலவசமாக டி-ஷா்ட், போட்டியில் வெற்றி பெறுபவா்களுக்கு மொத்தம் ரூ. 4.6 லட்சம் வரையிலான பரிசுகள், ஓட்டத்தின் இலக்கை அடைபவா்களுக்கு பதக்கங்கள் ஆகியவை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு, 9944134770, 7070975765, 8682906247 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பசுமை மாரத்தான் ஓட்டப் போட்டிக்கான முன்பதிவை பணியிடம் மாறிய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆ.மயில்வாகனன் பாரி விளையாட்டு மைதானத்தில் அண்மையில் தொடக்கி வைத்தாா். இதில் விளையாட்டு வீரா்கள், இளைஞா்கள், சிறுவா், சிறுமியா், காவல் துறையினா் உள்ளிட்டோா் முன்பதிவு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com