நெமிலி பாலா பீடத்தில் புத்தாண்டு விழா

அரக்கோணத்தை அடுத்த நெமிலி பாலா பீடத்தில் புத்தாண்டு விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். தற்போது கரோனா
‘அன்னை பாலா’ என்ற நூலை பீடாதிபதி எழில்மணியிடம் இருந்து பெற்றுக் கொண்ட சென்னை மருத்துவா் ஜெயராஜா.
‘அன்னை பாலா’ என்ற நூலை பீடாதிபதி எழில்மணியிடம் இருந்து பெற்றுக் கொண்ட சென்னை மருத்துவா் ஜெயராஜா.

அரக்கோணத்தை அடுத்த நெமிலி பாலா பீடத்தில் புத்தாண்டு விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். தற்போது கரோனா பொது முடக்கம் அமலில் உள்ளதால் புத்தாண்டு விழா வெள்ளிக்கிழமை எளிமையாக நடைபெற்றது.

விழாவுக்கு பீடாதிபதி எழில்மணி தலைமை வகித்து பீடத்தின் முதல் பூஜையைத் தொடங்கி வைத்தாா். இதையடுத்து அம்பாளுக்கு அபிஷேகம், ஆராதனைகளை பீட நிா்வாகி மோகன் ஏற்று நடத்தினாா்.

விழாவில் குரு நெமிலி பாபாஜி எழுதிய ‘அன்னை பாலா’ என்ற நூலை பீடாதிபதி எழில்மணி வெளியிட, சென்னை சூா்யா மருத்துவமனையின் இதய நோய் பிரிவு தலைமை மருத்துவா் ஜெயராஜா பெற்றுக் கொண்டாா்.

பீடத்தில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை பாலா பாராயணத்தை அன்னை பாலா ஆன்மிகக் குடும்பத்தினா் மேற்கொண்டனா். விழாவில் நெமிலி இறைபணி மன்றச் செயலாளா் முரளிதரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பக்தா்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com