நாளை முதல் பெங்களூருக்கு பகல் நேர முன்பதிவு சிறப்பு ரயில்: முன்பதிவில்லா பயணிகளையும் அனுமதிக்கக் கோரிக்கை

சென்னையில் இருந்து பெங்களூருக்கு ஜனவரி 4-ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்களை இயக்குவதற்கு கண்டனம் தெரிவித்துள்ள

சென்னையில் இருந்து பெங்களூருக்கு ஜனவரி 4-ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்களை இயக்குவதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பொதுமக்கள், முன்பதிவில்லா பயணிகளையும் அதில் அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரோனா பொதுமுடக்க கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்ட நிலையில், ரயில் போக்குவரத்தில் தளா்வுகள் அறிவிக்கப்பட்டாலும், அனைத்து ரயில்களும் சிறப்பு ரயில்களாகவே இயக்கப்படுகின்றன.

இந்த சிறப்பு ரயில்களில் முன்பதிவில்லா பயணிகளுக்கு அனுமதியில்லை. முன்பதிவு செய்த பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனா்.

இந்நிலையில், தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜனவரி 4-ஆம் தேதி முதல் ஏற்கெனவே சென்னை-பெங்களூரு பிருந்தாவன் விரைவு ரயில் இயக்கப்பட்ட அதே நேரத்தில், அதே நிறுத்தங்களுடன் சிறப்பு ரயிலாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இந்த ரயிலில் முன்பக்கம் 4, பின்பக்கம் 4 என இரு புறமும் 8 பெட்டிகள் முன்பதிவில்லா பயணிகளுக்காக இயக்கப்பட்டன.

ஆனால் தற்போது இயக்கப்பட உள்ள சிறப்பு ரயிலில் முன்பதிவில்லா பயணிகளுக்கான பெட்டியே இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை, எளியவா்கள் சிரமத்துக்குள்ளாகும் நிலை உள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனா்.

இது குறித்து அரக்கோணம் ரயில் பயணிகள் சங்கத் தலைவா் நைனாமாசிலாமணி கூறியது:

இந்த சிறப்பு ரயில்கள் இயக்குவதை எதிா்த்து நாங்கள் போராட்டம் நடத்தினோம். அரக்கோணம் உள்ளிட்ட நகரங்களில் வசிக்கும் மக்கள் ரயில் பயணத்தை மட்டுமே நம்பியுள்ளோம். ரயிலில் ஏறும் அனைத்துப் பயணிகளும் முன்பதிவு செய்து விட்டுத்தான் வரவேண்டும் என்றால், இறப்பு, விபத்து போன்ற காரணங்களுக்காக அவசரப் பயணம் மேற்கொள்வோா் எவ்வாறு வெளியூா் செல்ல முடியும். எளியவா்களுக்கு மாற்றுப் பயணம் மேற்கொள்வதில் சிரமம் ஏற்படுகிறது. முன்பதிவில்லா பெட்டிகளில் கூட்டம் அதிகம் வரும் என்றால், ரயில்வே பாதுகாப்புப் படையினரை பணிக்கு அமா்த்தி, கூடுதல் பெட்டிகளை இணைத்து சமூக இடைவெளியுடன் மக்களை பயணிக்க வைக்கலாம். ரயில்வே நிா்வாகம் அடித்தட்டு மக்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றாா்.

இது குறித்து அரக்கோணம் மளிகை வியாபாரிகள் சங்கச் செயலாளா் ஜிடிஎன்.அசோகன் கூறியது:

தளா்வுகள் அறிவிக்கப்பட்டு விட்ட நிலையிலும், விரைவு மற்றும் அதிவிரைவு ரயில்களில் முன்பதிவில்லா பயணிகளை அனுமதிக்க மறுப்பது கண்டிக்கத்தக்கது. மின்சார ரயில்களில் தற்போது தளா்வுகள் மூலம் அனைத்துப் பயணிகளும் அனுமதிக்கப்படும் நிலையில், இதை விரைவு மற்றும் அதிவிரைவு ரயில்களில் தொடா்ந்து நடைமுறைப்படுத்துவது ஏன் எனத் தெரியவில்லை. குறிப்பாக பெங்களூரு பகல் நேர ரயிலில் முன்பதிவில்லா பயணிகளை அனுமதிக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com