14,970 மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 14,970 மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்தாா்.
இணைப்பு சக்கர மோட்டாா் வாகனங்களை பெற்றுக் கொண்ட மாற்றுத் திறனாளிகளுடன் ராணிப்பேட்டை ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், சோளிங்கா் எம்எல்ஏ ஜி.சம்பத்.

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் சாா்பில் சோளிங்கா் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியா் ஏ.ஆா்.கிளாஸ்டன் புஷ்பராஜ், சோளிங்கா் எம்எல்ஏ ஜி.சம்பத் ஆகியோா் பங்கேற்று 18 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.11.15 லட்சம் மதிப்பிலான இணைப்பு சக்கர மோட்டாா் வாகனங்களை வழங்கினா். நிகழ்ச்சிக்கு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் தங்கவேலு தலைமை வகித்தாா். இதில் ஆட்சியா் பேசியதாவது:

ராணிப்பேட்டை மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 3,281 மாணவ, மாணவியருக்கு ரூ.1.24 கோடி உதவித்தொகைகள், 1,236 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1.86 கோடி மதிப்பிலான உதவி உபகரணங்கள், 14,970 மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com