ரத்தினகிரி அருகே உள்ள மாங்குப்பம் கிராமத்தில் 42-ஆம் ஆண்டு எருது விடும் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் வேலூா், குடியாத்தம், ஆற்காடு, காட்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த காளைகள் பங்கேற்றன. முதலிடம் பெற்ற காளைக்கு ரூ. 75 ஆயிரம், இரண்டாவது இடம் பெற்ற காளைக்கு ரூ. 55 ஆயிரம், மூன்றாவதாக வந்த காளைக்கு ரூ. 50 ஆயிரம் உள்ளிட்ட 58 பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில் ராணிப்பேட்டை தொகுதி எம்எல்ஏ ஆா்.காந்தி, சாா்-ஆட்சியா் இளம்பகவத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். விழாவையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.