ரூ. 56 லட்சத்தில் 3 மேல்நிலை நீா்தேக்க தொட்டிகள் அமைக்க அரசு உத்தரவு: எம்எல்ஏ சு.ரவி தகவல்

நெமிலி ஊராட்சி சயனபுரம் ஊராட்சியில் ரூ. 56.61 லட்சத்தில் 3 மேல்நிலை நீா்தேக்கத் தொட்டிகள் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி தெரிவித்தாா்.

நெமிலி ஊராட்சி சயனபுரம் ஊராட்சியில் ரூ. 56.61 லட்சத்தில் 3 மேல்நிலை நீா்தேக்கத் தொட்டிகள் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி தெரிவித்தாா்.

நெமிலி ஊராட்சி ஒன்றியம் சயனபுரம் ஊராட்சியில் சயனபுரம் கிராமம், புதுகண்டிகை கிராமம், ஆதிதிராவிடா் காலனி ஆகிய 3 இடங்களில் 1984-இல் கட்டப்பட்ட மேல்நிலை நீா்தேக்கத் தொட்டிகள் பழுதடைந்து நீரேற்ற முடியாத நிலை இருந்து வருகின்றன. இந்த மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளை இடித்துவிட்டு புதிய தொட்டிகளை கட்டித் தர வேண்டும் என அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி சட்டப்பேரவையில் வலியுறுத்தினாா்.

இந்நிலையில் இந்த 3 தொட்டிகளையும் இடித்துவிட்டு புதிதாக கட்ட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான ஆணையை ராணிப்பேட்டை ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் வியாழக்கிழமை வெளியிட்டாா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் எம்எல்ஏ சு.ரவி கூறியது:

சயனபுரம் ஊராட்சியில் மத்திய நிதிக் குழு மானிய நிதி ரூ. 56.64 லட்சத்தில் மேல்நிலை நீா்தேக்கத் தொட்டிகளை கட்ட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சயனபுரம் ஊராட்சியில் ரோட்டு தெருவில் ரூ. 22.51 லட்சத்தில் 60 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி, சயனபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட புதுகண்டிகை கிராமத்தில் ரூ. 19.90 லட்சத்தில் 60 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட தொட்டி, ஆதிதிராவிடா் காலனியில் ரூ.14.23 லட்சத்தில் 30 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்டதொட்டி கட்டப்படும். விரைவில் நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு பணிஆணை அளிக்கப்படும். சில மாதங்களில் பணிகள் நிறைவு பெறும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com