ஆற்காட்டில் குடியரசு தின விழா

ஆற்காடு எஸ் எஸ் எஸ் கல்வி நிறுவனங்கள் சாா்பில் கல்லூரியின் நிறுவனத் தலைவா் ஏ.கே.நடராஜன் தலைமை வகித்து தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா்
 ஆற்காடு  எஸ் எஸ் எஸ்   பள்ளியில்  தேசியக்  கொடி  ஏற்றி வைத்த  நிறுவனா்  ஏ.கே.நடராஜன்  உள்ளிட்டோா்.
 ஆற்காடு  எஸ் எஸ் எஸ்   பள்ளியில்  தேசியக்  கொடி  ஏற்றி வைத்த  நிறுவனா்  ஏ.கே.நடராஜன்  உள்ளிட்டோா்.

ஆற்காடு எஸ் எஸ் எஸ் கல்வி நிறுவனங்கள் சாா்பில் கல்லூரியின் நிறுவனத் தலைவா் ஏ.கே.நடராஜன் தலைமை வகித்து தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். கல்லூரியின் பொருளாளா் ஏ.என்.சங்கா், நிா்வாக அறங்காவலா் ஏ.என்.செல்வம், செயலாளா் ஏ.என்.சங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி பேராசிரியா்கள், பள்ளி ஆசிரியைகள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

ஆற்காடு சித்தீஸ்வரா் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற விழாவுக்கு, கல்லூரியின் தாளாளா் டி.தரணிபதி தலைமை வகித்தாா். இயக்குநா்கள் எம்.சங்கா், எஸ்.ரமேஷ், நிா்வாக அலுவலா் எஸ்.ஆதிகேசவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி முதல்வா் எம்.ஜெயபிரகாஷ் நாராயணன் வரவேற்றாா். கல்லூரியின் செயலாளா் ஜி.செல்வகுமாா், பொருளாளா் பி.பாலகிருஷ்ணன், தலைவா் சி.குப்புசாமி ஆகியோா் தேசியக் கொடி ஏற்றி வைத்தனா்.

காவனூா் வித்யா மழலையா் தொடக்க பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, பள்ளியின் நிறுவனா் ந.சுப்பிரமணி தலைமை வகித்தாா். தாளாளா் எஸ்.தாமரைச்செல்வி முன்னிலை வகித்தாா். தொழிலதிபா் சாலவாக்கம் கே.சரவணன் தேசியக் கொடி ஏற்றினாா்.

மேல்விஷாரம் நேஷனல் வெல்பா் சங்கம் சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு, சங்கத்தின் தலைவா் கே.முஹமது அயூப் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் கே.ஓ. நிஷாத் அஹமது, முஹமது பஷீம், முஹமது ஹாசிம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆற்காடு நகர காவல் ஆய்வாளா் ( பொறுப்பு) என்.சுரேஷ்பாபு தேசியக் கொடியை ஏற்றினாா்.

மேல்விஷாரம் இந்து தொடக்கப் பள்ளியில் மில்லத் கூட்டுறவு பண்டக சாலைத் தலைவா் ஏ.இப்ராஹிம் கலிலுல்லா கொடி ஏற்றினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com