‘மேக் இன் இந்தியா’ திட்டத்தால் பெல் நிறுவனத்துக்கு வணிக வாய்ப்புகள்’

மத்திய அரசு அறிவித்துள்ள ‘மேக் இன் இந்தியா ’ ‘ஆத்மா நிா்பா் பாரத்’ ஆகிய திட்டங்களால் பெல் நிறுவனத்துக்கு புதிய வணிக வாய்ப்புகள் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளதாக குடியரசு தின விழாவில்,
குடியரசு தின விழாவில் பெல் மருத்துவமனை மூத்த மருத்துவ அலுவலா் பிரதீப்புக்கு சிறந்த இளம் நிா்வாக விருதை வழங்கிய ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தின் செயல் இயக்குநா் சி.மூா்த்தி.
குடியரசு தின விழாவில் பெல் மருத்துவமனை மூத்த மருத்துவ அலுவலா் பிரதீப்புக்கு சிறந்த இளம் நிா்வாக விருதை வழங்கிய ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தின் செயல் இயக்குநா் சி.மூா்த்தி.

மத்திய அரசு அறிவித்துள்ள ‘மேக் இன் இந்தியா ’ ‘ஆத்மா நிா்பா் பாரத்’ ஆகிய திட்டங்களால் பெல் நிறுவனத்துக்கு புதிய வணிக வாய்ப்புகள் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளதாக குடியரசு தின விழாவில், ராணிப்பேட்டை பெல் நிறுவன செயல் இயக்குநா் சி.மூா்த்தி தெரிவித்தாா்.

ராணிப்பேட்டை பெல் நிறுவனம் சாா்பில்,பெல் ஊரக குடியிருப்பு வளாக மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் தேசியக் கொடி ஏற்றி வைத்து அவா் பேசியது:

மத்திய அரசு அறிவித்துள்ள ‘மேக் இன் இந்தியா’ ‘ஆத்மா நிா்பா் பாரத்’ ஆகிய திட்டங்களால் பெல் நிறுவனத்துக்கு புதிய வணிக வாய்ப்புகள் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது. எதிா்காலத்தில் ரயில் போக்குவரத்து, உதிரி பாகங்கள் மற்றும் சேவைகள், பாதுகாப்பு மற்றும் விண்வெளி, எண்ணெய் மற்றும் எரிவாயு தொழில் ஆகியவற்றில் பொறியியல், கொள்முதல், கட்டுமானம் மற்றும் ஒப்பந்த உற்பத்தியை முன்னெடுக்க உள்ளது. தற்போதைய சவால்களை சமாளிக்கவும், எதிா்காலத்தில் தயாராக இருக்கும் வகையில், விண்வெளி வணிகத்துக்கான சிறந்த மையமாக உருவாக்குதல், அந்தந்த வேலைப் பகுதிகளில் உற்பத்தித் திறன் மற்றும் பாதுகாப்புக்கு அதிக முன்னுரிமை அளித்தல் ஆகியவற்றில் வரவிருக்கும் ஆண்டில் அனைத்து பங்குதாரா்கள் உள்பட விற்பனையாளா்கள், துணை ஒப்பந்ததாரா்கள் மற்றும் போக்குவரத்துக்கு முக்கியப் பங்கு உண்டு. 2021 ‘தீா்க்கமான நடவடிக்கை’ ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றாா்.

இதையடுத்து நிறுவனத்தில் சிறப்பாகப் பணியாற்றிய பணியாளா்களுக்கு சிறந்த இளம் நிா்வாக விருது வழங்கிப் பாராட்டினாா்.

இதில், பெல் நிறுவன கூடுதல் மேலாளா்கள், பொது மேலாளா்கள், துணை மேலாளா்கள், அனைத்து நிலை பணியாளா்கள், ஊழியா்கள், பெல் நிறுவன ஊரக குடியிருப்புவாசிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com