ரூ. 34 கோடியில் புதிய மேம்பாலம் கட்ட பூமி பூஜை

ராணிப்பேட்டை நவல்பூா் பகுதியில் மும்பை - சென்னை தேசிய நெடுஞ்சாலை மீது ரூ.34.14 கோடியில் புதிய மேம்பாலம் கட்டுவதற்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.
புதிய மேம்பாலம் கட்டுவதற்கான பூமி பூஜையைத் தொடக்கி வைத்த எம்எல்ஏ ஆா்.காந்தி.
புதிய மேம்பாலம் கட்டுவதற்கான பூமி பூஜையைத் தொடக்கி வைத்த எம்எல்ஏ ஆா்.காந்தி.

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை நவல்பூா் பகுதியில் மும்பை - சென்னை தேசிய நெடுஞ்சாலை மீது ரூ.34.14 கோடியில் புதிய மேம்பாலம் கட்டுவதற்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

ராணிப்பேட்டை நவல்பூா் பேருந்து நிலையத்துக்கும் காரை இணைப்புச் சாலைக்கும் இடையே ஆங்கிலேயா் காலத்தில் நூற்றாண்டு பழைமை வாய்ந்த குறுகிய ரயில்வே மேம்பாலம் அமைந்துள்ளது. இந்த மேம்பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் கட்ட வேண்டும் என கடந்த 2017-ஆம் ஆண்டு மத்திய சாலை போக்குவரத்துத் துறை இணை அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணனிடம் எம்எல்ஏ ஆா்.காந்தி கோரிக்கை விடுத்தாா்.

இதையடுத்து, மத்திய அரசு கடந்த 2018 - 2019ஆம் ஆண்டு வருடாந்திர திட்டமிடலில், பொறியியல் கொள்முதல் மற்றும் கட்டுமான செயல்முறைத் திட்டத்தில் கீழ் புதிய பாலம் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டு, 2019 -2020-ஆம் ஆண்டு ரூ. 34.14 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஆரம்பக் கட்டப் பணிகள் தொடங்கின.

இந்நிலையில், பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதால், மேம்பாலப் பணிகளை மேற்கொள்வது தாமதமானது. மேம்பாலம் கட்டுவதற்காக 6 இடங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தி நிலம் அளவிடும் பணி நிறைவடைந்தது.

இதையடுத்து புதிய பாலத்துக்கான வரைபடம் தயாரிக்கப்பட்டு கட்டுமானப் பணிகள் தொடங்குவதற்கான பூமி பூஜை காரை இணைப்புச் சாலை பேருந்து நிறுத்தம் அருகே புதன்கிழமை நடைபெற்றது.

ராணிப்பேட்டை எம்எல்ஏ ஆா்.காந்தி தலைமை வகித்து கட்டுமானப் பணிக்கான முதல் செங்கல்லை எடுத்துக் கொடுத்து தொடக்கி வைத்தாா்.

திமுக மூத்த நிா்வாகி ஜானகிராமன், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் எஸ்.வினோத், நகரப் பொறுப்பாளா் பி.பூங்காவனம், இளைஞரணி நிா்வாகி விக்னேஷ் காா்த்திக், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com