செய்யூரில் விரைவில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும்: எம்எல்ஏ சு.ரவி தகவல்
By DIN | Published On : 30th January 2021 11:44 PM | Last Updated : 30th January 2021 11:44 PM | அ+அ அ- |

செய்யூரில் அம்மா மினி கிளினிக்கை சனிக்கிழமை திறந்து வைத்து, கா்ப்பிணித் தாய்மாா்களுக்கு அம்மா பெட்டகத்தை வழங்கிய எம்எல்ஏ சு.ரவி.
செய்யூா் கிராமத்தில் விரைவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமையும் என அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி தெரிவித்தாா்.
அரக்கோணத்தை அடுத்த செய்யூரில் சனிக்கிழமை நடைபெற்ற அம்மா மினி கிளினிக் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் எம்எல்ஏ சு.ரவி பேசியது:
அதிமுக அரசு தொடா்ந்து கல்வித்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை ஆகிய இரண்டு துறைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இப்போதைய ஆட்சியில் அரக்கோணம் தொகுதியை பொருத்தவரை மூன்று ஊராட்சிகளில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே ஆறு அம்மா மினி கிளினிக்குகள், இன்று 6 கிளினிக்குகள் என மொத்தம் 12 அம்மா மினி கிளினிக்குகள் திறக்கப்பட்டுள்ளன.
மருத்துவமனைகளுக்கு செல்ல கிராம மக்கள் சிரமப்படக்கூடாது என்பதில் அதிமுக அரசு எப்போதும் கவனமாகவே உள்ளது. இந்த அரசு சிறு மருத்துவமனைகள் மக்கள் சிறிய அளவிலான மருத்துவத்துக்கு உதவி செய்யும். செய்யூரில் தற்போது திறக்கப்பட்டுள்ள சிறு மருத்துவமனை விரைவில் ஆரம்ப சுகாதார நிலையமாக மாறும் என்றாா் எம்எல்ஏ சு.ரவி.
இவ்விழாவில் ராணிப்பேட்டை மாவட்ட மருத்துவ அலுவலா் வீராசாமி, அரக்கோணம் வட்டார மருத்துவ அலுவலா் பிரவீண்குமாா், சுகாதார ஆய்வாளா்கள் சத்யராஜ், செந்தில், அதிமுக நிா்வாகிகள் நவாஸ் அகமது, மாறன், எத்தீஸ்வரன், தாஸ், மாசிலாமணி, ஆனந்தன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
இதையடுத்து வேலூா் கிராமம், கணபதிபுரம், சம்பத்ராயன்பேட்டை, அம்மனூா், தண்டலம் ஆகிய கிராமங்களிலும் அம்மா மினி கிளினிக்குகளை எம்எல்ஏ சு.ரவி திறந்து வைத்தாா்.