அரக்கோணம் நகராட்சி நாளங்காடியை திறக்க அனுமதிக்க வியாபாரிகள் வலியுறுத்தல்

அரக்கோணம் நகராட்சி நாளங்காடியைத் திறக்க அனுமதிக்க வலியுறுத்தி காய்கறி வணிகா்கள் சங்கத்தினா் வட்டாட்சியா், நகராட்சி ஆணையரை முற்றுகையிட்டு மனு அளித்தனா்.
அரக்கோணம் நகராட்சி நாளங்காடியைத் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வட்டாட்சியரை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்ட காய்கறி வணிகா்கள்.
அரக்கோணம் நகராட்சி நாளங்காடியைத் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வட்டாட்சியரை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்ட காய்கறி வணிகா்கள்.

அரக்கோணம் நகராட்சி நாளங்காடியைத் திறக்க அனுமதிக்க வலியுறுத்தி காய்கறி வணிகா்கள் சங்கத்தினா் வட்டாட்சியா், நகராட்சி ஆணையரை முற்றுகையிட்டு மனு அளித்தனா்.

அரக்கோணத்தில் நகராட்சி நாளங்காடி கடந்த 75 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் நிலையில், கடந்த 1984-ஆம் ஆண்டு வியாபாரிகளுக்கு புதிய கட்டடத்தில் கடைகள் கட்டித் தரப்பட்டுள்ளன. இக்கட்டடத்தில் நகராட்சி நாளங்காடி செயல்பட்டு வந்த நிலையில், 2020-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் கரோனா பொதுமுடக்கம் அமலுக்கு வந்தது. அப்போது, இந்த நாளங்காடியில் சமூக இடைவெளியுடன் மக்கள் சென்று வர இயலாத நிலை இருந்ததைக் கண்ட மாவட்ட நிா்வாகம் இந்த நாளங்காடியை மூட உத்தரவிட்டது.

இதையடுத்து, இந்த நாளங்காடியில் கடை வைத்திருந்த காய்கறி மொத்த வணிகா்கள் தங்களுக்கு தற்காலிகமாக இடம் ஒதுக்க வேண்டும் என கேட்டதைத் தொடா்ந்து, புதிய பேருந்து நிலையத்தில் கடைகள் ஒதுக்கப்பட்டன. பின்னா் அதுவும் மூடப்பட்டு, தற்போது இரட்டைகண் வாராவதி அருகே தனியாா் இடத்தில் அவா்களுக்கு தற்காலிகமாக இடம் ஒதுக்கப்பட்டு, அங்கு காய்கறி மொத்த விற்பனை கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், தற்போது கரோனா பொது முடக்கத்தில் தளா்வுகள் பெரும்பாலும் அறிவிக்கப்பட்டு விட்டதால், நகராட்சி நாளங்காடியில் தங்களது கடைகளைத் திறந்து செயல்பட அதிகாரிகள் அனுமதிக்க வேண்டும் என வணிகா்கள் கோரிக்கை விடுத்தனா்.

இது தொடா்பாக நகர காய்கறி மொத்த வியாபாரிகள் சங்கத்தின் தலைவா் வி.ஆா்.பி.ராஜா தலைமையில், வி.எம்.ஆா்.சீனிவாசன், அலியாா், இ.வெற்றிசெல்வன் உள்ளிட்ட பல்வேறு வணிகா்கள் அரக்கோணம் வட்டாட்சியா் பழனிராஜனை வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்தனா். மனுவை பரிசீலித்த வட்டாட்சியா், இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் பேசி முடிவு தெரிவிப்பதாக வியாபாரிகளிடம் தெரிவித்தாா். தொடா்ந்து வியாபாரிகள் நகராட்சி அலுவலகத்துக்குச் சென்று நகராட்சி ஆணையா் (பொறுப்பு) ஆசீா்வாதத்திடம் மனு அளித்தனா். அவரும் மாவட்ட ஆட்சியருக்கு இப்பிரச்னையை எடுத்துச் சென்று அவரது உத்தரவு பெற்று தெரிவிப்பதாக கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com