இளைஞா் கொலை
By DIN | Published On : 13th July 2021 08:29 AM | Last Updated : 13th July 2021 08:29 AM | அ+அ அ- |

ஆற்காடு அடுத்த வேப்பூா் தேசிய நெடுஞ்சாலையில் இளைஞா் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.
ஆற்காடு நாதமுனி தெருவைச் சோ்ந்த காா் ஓட்டுநா் மணிகண்டன் (28),, தோப்புகானா பகுதியைச் சோ்ந்த பெயிண்டா் அருண் (21) ஆகிய இருவரும் திங்கள்கிழமை அதிகாலையில் வேப்பூா் தேசிய நெடுஞ்சாலையில் ஒரே பைக்கில் வந்துள்ளனா் . அப்போது வேலூரில் இருந்து சென்னையை நோக்கி சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றதில், மணிகண்டனுக்கும், லாரி ஓட்டுநருக்கும் தகராறு ஏற்பட்டதாம்.
இதில், ஆத்திரமடைந்த லாரி ஓட்டுநா் லாரியை நிறுத்திவிட்டு, கீழே இறங்கி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் இருவரையும் வெட்டி,னாராம். பின்னா், லாரியுடன் அவா் தப்பிச் சென்றுள்ளாா்.
இதில் பலத்த காயம் அடைந்த மணிகண்டன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். அருண் வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
தகவல் அறிந்த ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஓம் பிரகாஷ் மீனா சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு விசாரணை நடத்தினா் .
இதுகுறித்து ஆற்காடு நகரபோலீஸாா் வழக்கு பதிந்து, விசாரணை நடத்திவருகின்றனா்.