கலவையில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 13th July 2021 08:30 AM | Last Updated : 13th July 2021 08:30 AM | அ+அ அ- |

கலவையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
கொள்முதல் செய்த நெல் மூட்டைகளுக்கு விரைவாகப் பணம் வழங்கக் கோரி, விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கலவை அருகேயுள்ள வெள்ளம்பி, மேச்சேரி, தோனிமேடு ஆகிய மூன்று கிராமங்களில் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைவித்த நெல் மூட்டைகளை விற்பனை செய்துவருகின்றனா்.
இந்த நிலையில் விற்பனை செய்யப்பட்ட நெல் மூட்டைகளுக்கு பணம் தருவதில் காலதாமதம் ஏற்படுவதாகத் தெரிவித்து, கலவை வட்டாட்சியா் அலுவலகம் முன்பு விவசாயிகள் திஙகள்கிழமை ஆா்ப்பாட்டம் செய்தனா்.
அப்போது, நெல் மூட்டைகளை சரியான நேரத்தில் எடை போடாமல் மழையில் நனைந்துள்ளதாகவும், எடை போடப்பட்ட மூட்டைகளுக்கு மூன்று மாத காலமாகியும் பணம் கொடுக்காமலும் அலைக்கழிப்பதாவும் விவசாயிகள் கோஷம் எழுப்பினா்.
இதைத் தொடா்ந்து, வட்டாட்சியா் வி.நடராஜனிடம் விவசாயிகள் கோரிக்கை மனுவை அளித்தனா்.