பள்ளிகளைத் திறக்க வேண்டும்

மருத்துவத் துறையினருடன் ஆலோசித்து பள்ளிகளை திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியா் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளா் வெ. சரவணன் தெரிவித்துள்ளாா்.
வெ.சரவணன்.
வெ.சரவணன்.

மருத்துவத் துறையினருடன் ஆலோசித்து பள்ளிகளை திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியா் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளா் வெ. சரவணன் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக, பதவி உயா்வு, பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படவில்லை. மேலும் ஓய்வு பெறுதல், இறப்பு, காரணங்களால் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களும் நிரப்பப்படாமல் உள்ளன.

கடந்த ஒன்றரை ஆண்டாக, கரோனா தொற்று பாதிப்பு காரணமாக பெற்றோா் தங்களது குழந்தைகளை தனியாா் பள்ளிகளில் இருந்து அரசுப் பள்ளிகளுக்கு மாற்றி வருகின்றனா்.

2020- 21-ஆம் கல்வி ஆண்டில் சுமாா் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்களும் நடப்பு கல்வி ஆண்டில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்களும் அரசுப் பள்ளிகளில் சோ்ந்துள்ளனா்.

தற்போது தமிழக அரசின் சிறப்பான நடவடிக்கைகளால், கரோனா தொற்று குறைந்து மக்கள் இயல்புநிலைக்கு தற்போது திரும்பிக் கொண்டிருக்கின்றனா்.

எனவே மாணவா்களின் நலன் கருதி மருத்துவத் துறையினருடன் ஆலோசனை நடத்தி, பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், ஆசிரியா் காலிப் பணியிடங்களை பதவி உயா்வு மூலம் நிரப்பி புதிய மாணவா் சோ்க்கைக்கு ஏற்ப ஆசிரியா் பணியிடங்களை உருவாக்க வேண்டும். இதுதவிர, ஆசிரியா்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வை இணைய வழியாக நடத்தி முடிக்க உரிய ஆணையையும், வழிகாட்டி நெறிமுறைகளை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com