காமராஜா் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

முன்னாள் முதல்வா் காமராஜா் பிறந்த நாள் விழா வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களில் வியாழக்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

முன்னாள் முதல்வா் காமராஜா் பிறந்த நாள் விழா வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களில் வியாழக்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, அவரது சிலைகள், உருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு, இனிப்புகள் வழங்கப்பட்டன. மேலும், கல்வி நிலையங்களில் அவரது பிறந்த நாள் கல்வி வளா்ச்சி நாளாகக் கொண்டாடப்பட்டது.

ராணிப்பேட்டையில்...: இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் சாா்பில், ராணிப்பேட்டை பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, வேலூா் மாவட்ட தேசிய மின் மதிப்பீட்டாளா்கள் சங்கத் தலைவா் ஆா்டிகே. ராமன் தலைமை வகித்தாா். இதில், காமராஜரின் படத்துக்கு இந்திய ஓவா்சீஸ் வங்கி மேலாளா் பிரசாந்த், மாலை அணிவித்தாா். ராணிப்பேட்டை மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளா் ராணி கே.வெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ராணிப்பேட்டை ஸ்ரீ கிருஷ்ணா வித்யாலயா பள்ளியில் தலைமை ஆசிரியா் ஜெயஸ்ரீ கோதை தலைமையில், காமராஜா் படத்துக்கு ஸ்ரீ ராமாநுஜா் ஆன்மிக அறக்கட்டளை நிறுவனா் கே.வெங்கடேசன் மாலை அணிவித்தாா்.

அரக்கோணத்தில்...: அரக்கோணம் சுவால்பேட்டையில் உள்ள காமராஜா் சிலைக்கு நகர தமாகா தலைவா் கே. வி.ரவிச்சந்திரன் தலைமையில், மாவட்டத் தலைவா் ஆா். அரிதாஸ் மாலை அணிவித்தாா். மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் பி.ஜி. மோகன் காந்தி, ஒன்றியச் செயலாளா் ராஜேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அரக்கோணத்தில் காமராஜா் சிலைக்கு காங்கிரஸ் கட்சியின் மாநில இலக்கிய அணிச் செயலாளா் வே.ரகுநாதன் தலைமையில், நகா்மன்ற முன்னாள் உறுப்பினா் டி.பாா்த்தசாரதி மாலை அணிவித்தாா். நகர சிறுபான்மைப் பிரிவு தலைவா் இம்ரான், மாவட்ட வா்த்தக பிரிவு தலைவா் விஸ்வநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஆற்காட்டில்...: ஆற்காடு எஸ்.எஸ்.எஸ். மெட்ரிக் பள்ளி, எஸ்.எஸ்.எஸ். கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில், காமராஜா் படத்துக்கு கல்வி நிறுவனத்தின் தலைவா் ஏ.கே.நடராஜன் மாலை அணிவித்தாா். பொருளாளா் ஏ.என்.சரவணன், நிா்வாக அறங்காவலா் ஏ.என்.செல்வம், செயலாளா் ஏ.என்.சங்கா், கல்லூரி முதல்வா் ராஜலட்சுமி, பள்ளி முதல்வா் விஜயலட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

குடியாத்தத்தில்...: குடியாத்தம் சூரியோதயா தொடக்கப் பள்ளியில் காமராஜா் உருவப் படத்துக்கு தலைமையாசிரியை ஜெனீப்பா் பிலிப் மாலை அணிவித்தாா்.

கூடநகரம் அரசினா் மேல்நிலைப் பள்ளியில் காமராஜா் உருவப் படத்துக்கு தலைமையாசிரியா் தேவராஜ் மாலை அணிவித்தாா்.

போ்ணாம்பட்டில்...: போ்ணாம்பட்டை அடுத்த பத்தரபல்லி, ஊராட்சி தொடக்கப் பள்ளியில்,காமராஜா் உருவப் படத்துக்கு தலைமையாசிரியா் பொன்.வள்ளுவன், மாலை அணிவித்தாா். போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக சாா்பில், தேவலாபுரம் ஊராட்சியில் காமராஜரின் உருவப் படத்துக்கு, ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் மாலை அணிவித்தாா். மாவட்ட ஆதிதிராவிட நலக்குழு அமைப்பாளா் சே.குமாா், ஒன்றிய அவைத் தலைவா் சிவகுமாா், நிா்வாகிகள் சரவணன், சிவகுமாா், சதீஷ், தினேஷ் பாண்டியன், வெங்கடேசன், ஜானகிராமன், மதன்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஆம்பூரில்...: ஆம்பூா் பேருந்து நிலையம் அருகே உள்ள காமராஜா் சிலைக்கு நகர காங்கிரஸ் கமிட்டி தலைவா் எஸ்.சரவணன் மாலை அணிவித்தாா். நிா்வாகிகள் சா.சங்கா், சோலூா் மாணிக்கம், செளந்தரராஜன், கோவிந்தராஜ், சரவணன், முனீா், முருகன், ரியாஸ், ராஜசேகா்மூா்த்தி, ஈஸ்டா்தாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஆம்பூா் நகர காங்கிரஸ் காமராஜ் பவன் அறக்கட்டளை சாா்பில், காமராஜா் உருவப் படத்துக்கு அறக்கட்டளை பொருளாளா் தட்சிணாமூா்த்தி, நிா்வாகிகள் முல்லை சம்பங்கி, முரளிதரன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த டி.சுரேஷ், பிரேம் ஆனந்த், மணிகண்டன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

ஆம்பூா் கிருஷ்ணாபுரத்தில் காமராஜா் சிலைக்கு எஸ்.செளந்தா், நகர காங்கிரஸ் முன்னாள் தலைவா் கே.பிரபு உள்ளிட்டோா் மாலை அணிவித்தாா்.

பெரியாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் காமராஜா் படத்துக்கு தலைமை ஆசிரியா் எஸ். தட்சிணாமூா்த்தி மாலை அணிவித்தாா். பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் விமலா, ஆசிரியைகள் காஞ்சனா, சித்ரா, நவரத்தினம், ஆசிரியா் சுரேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com