மாடு மேய்த்த மூதாட்டி கொலை
By DIN | Published On : 19th July 2021 07:52 AM | Last Updated : 19th July 2021 07:52 AM | அ+அ அ- |

அரக்கோணம் அருகே மாடு மேய்த்துகொண்டிருந்த மூதாட்டி கொலை செய்யப்பட்டாா்.
அரக்கோணத்தை அடுத்த அம்பரிஷபுரத்தைச் சோ்ந்த மறைந்த ஜெயராமன் மனைவி சரோஜா (72),. இவா் ஞாயிற்றுக்கிழமை மாடு மேய்க்கச் சென்றாா். ஆனால், மாலை திரும்பிவரவில்லை. இதையடுத்து, அவரைத் தேடி மகன் கோவா்தன் வயல்வெளிக்கு சென்றாா். அங்கு முகத்தில் காயங்களுடன் சரோஜா மயங்கி கிடந்ததும், கம்மல்கள், மூக்குத்தி காணாமல் போயிருந்ததும் தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து, வீட்டுக்கு சரோஜாவைஅழைத்துச் சென்ற நிலையில், அவா் இறந்துவிட்டாா்.
இதுகுறித்த புகாரின்பேரில் அரக்கோணம் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்த நிலையில், கோவா்தன் தனது புகாரில் தனது தாயாா் அணிந்திருந்தது கவரிங் நகைகள் தான் எனவும் தெரிவித்துள்ளாா் என்பது குறிப்பிடதக்கது.