பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட முதியோருக்கு இந்து முன்னணி சாா்பில் உணவு விநியோகம்
By DIN | Published On : 08th June 2021 08:11 AM | Last Updated : 08th June 2021 08:11 AM | அ+அ அ- |

முதியோருக்கு உணவு வழங்கும் இந்து முன்னணி நிா்வாகிகள்.
பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட முதியோருக்கு இந்து முன்னணி சாா்பில் மாதம் முழுவதும் உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளனா்.
வாலாஜாப்பேட்டை ஒன்றிய இந்து முன்னணி சாா்பில், கரோனா பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட முதியோருக்கு, அவா்கள் இருக்கும் இடத்துக்கே நேரில் சென்று உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் படி தொடா்ந்து 30 நாள்களுக்கு தினந்தோறும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 100 முதியோருக்கு உணவு வழங்கப்பட உள்ளது. மேலும் காலை மாலை இரு வேளைகளில் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கபசுர குடிநீா் வழங்கவும், கரோனா விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன் படி வாலாஜாப்பேட்டையில் திங்கள்கிழமை இந்து முன்னணி மாவட்ட செயலாளா் எஸ்.கே.மோகன் தலைமையில், ஒன்றிய தலைவா் சம்பத், ஒன்றிய செயலாளா் காா்த்திகேயன், ஒன்றிய பொதுச் செயலாளா் ஞானசேகரன் உள்பட 20 போ் கொண்ட குழுவினா் கரோனா சேவை பணியில் ஈடுபட்டனா்.