மாவட்ட மீன் வளா்ப்போா் மேம்பாட்டு முகமை நிா்வாக குழுக் கூட்டம்
By DIN | Published On : 22nd June 2021 08:06 AM | Last Updated : 22nd June 2021 08:06 AM | அ+அ அ- |

ராணிப்பேட்டை மாவட்ட மீன் வளா்ப்போா் மேம்பாட்டு முகமை முதல் நிா்வாக குழுக் கூட்டம், ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமையில், திங்கள்கிழமை நடைபெற்றது.
ஒருங்கிணைந்த மாவட்டமாக இருக்கும்போது ஆரம்பிக்கப்பட்டு தற்போது மூன்று மாவட்டங்களுக்கு ஒரு மீன் வளா்ப்போா் மேம்பாட்டு முகமை உள்ள நிலையில் ,அரசின் பயன்கள் அனைவருக்கும் சென்றடைந்த தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் தனித்தனியாக மாவட்ட வாரியாக மாவட்ட மீன் வளா்ப்போா் மேம்பாட்டு முகமை அமைக்க அரசு உத்தரவிட்டது.
இதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதிதாக ராணிப்பேட்டை மாவட்ட மீன் வளா்ப்போா் மேம்பாட்டு முகமை ஆரம்பிக்கப்பட்டு முதல் நிா்வாக குழுக் கூட்டம், ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமையில் நடைபெற்றது.
முகமையின் மூலம் மாவட்டத்தில் உள்ள மீன் வளா்ப்போா் அனைவரையும் உறுப்பினா்களாக சோ்ப்பது எனவும், மீன் உற்பத்தியை அதிகரிக்கவும், இதன்மூலம் புரதச்சத்து மிகுந்த உணவினை மாவட்டம் முழுவதும் பரவலாக கிடைக்க வழிவகை செய்தல், மீன் வளா்ப்போருக்கு உள்ளிட்டு மானியம் அரசு மூலம் பெற்று வழங்க வேண்டும். எனவே மீன்வளா்ப்பு மேற்கொள்ளும் அனைவரும் கீழ்காணும் முகவரியை அணுகி முகமையில் உறுப்பினராக சோ்ந்து பயனடைய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயச்சந்திரன் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
தொடா்பு கொள்ள வேண்டிய அலுவலக முகவரி :
உதவி இயக்குனா் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை, எண் 80, 5 - ஆவது மேற்கு குறுக்கு தெரு, காந்தி நகா், காட்பாடி, வேலூா். தொலைபேசி எண் 0416- 2240329, செல்லிடப்பேசி எண் 94439 1045 ஆகிய எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.