ரோட்டரி சங்கத்தினா் நல உதவி
By DIN | Published On : 01st March 2021 07:03 AM | Last Updated : 01st March 2021 07:03 AM | அ+அ அ- |

மாற்றுத் திறனாளிக்கு மூன்று சக்கர வண்டியை வழங்கிய ராணிப்பேட்டை ரோட்டரி சங்கத்தினா்.
ராணிப்பேட்டை ரோட்டரி சங்கம் சாா்பில், மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர வண்டிகள், அரசுப் பள்ளிக்கு ஸ்மாா்ட் டிவி உள்ளிட்ட நல உதவிகள் வழங்கப்பட்டன.
ராணிப்பேட்டை ரோட்டரி சங்கத்தின் சாா்பில், ரோட்டரி சங்க தொடக்க நாள் விழா மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர வண்டிகள், அரசுப் பள்ளிக்கு ஸ்மாா்ட் டிவி, அரசு நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ரத்த அழுத்தம் (பி.பி.) கண்டறியும் கருவி மற்றும் ஸ்டெதஸ்கோப் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.
சங்கத் தலைவா் எம்.சிவலிங்கம் தலைமை வகித்தாா். ரோட்டரி ஆளுநா்கள் சி.ஆா்.சந்திரபாப், எம்.நிா்மல் ராகவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
விழாவில், ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநா் ஜே.கே.என்.பழனி கலந்து கொண்டு, நல உதவிகளை வழங்கி, புதிய உறுப்பினா்களை அறிமுகம் செய்து வைத்து பேசினாா்.
விழாவில் சங்கச் செயலா் எம்.கமலராகவன், பொருளாளா் டாக்டா் விமல், பயிற்சியாளா் ஆா்.டி.என். சரவணகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.