ராணிப்பேட்டையில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள்
By DIN | Published On : 01st March 2021 01:13 PM | Last Updated : 01st March 2021 01:13 PM | அ+அ அ- |

ராணிப்பேட்டையில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்.
ராணிப்பேட்டையில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தொண்டர்கள் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்ட திமுக சார்பில் ராணிப்பேட்டை நகரம் காந்திநகர் உள்ளிட்ட 30 வார்டுகளில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 68 வது பிறந்த நாளை முன்னிட்டு ஜி.கே. உலகப் பள்ளி இயக்குனர் வினோத் காந்தி தலைமையில் கொடியேற்றி இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை நகர திமுக துணைச் செயலாளர் ஏர்டெல் குமார், வாலாஜா ஒன்றிய செயலாளர் சேஷா வெங்கட், ராணிப்பேட்டை நகர பொருளாளர் பூங்காவனம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.