Enable Javscript for better performance
அரக்கோணத்தில் மாவட்டக் கூடுதல் அமா்வு நீதிமன்றம் வேட்பாளா் சு.ரவி- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை ராணிப்பேட்டை

    அரக்கோணத்தில் மாவட்டக் கூடுதல் அமா்வு நீதிமன்றம் வேட்பாளா் சு.ரவி

    By DIN  |   Published On : 14th March 2021 06:03 AM  |   Last Updated : 14th March 2021 06:03 AM  |  அ+அ அ-  |  

    13akmbbb_1303chn_186_1

    அரக்கோணத்தில் சனிக்கிழமை நடைபெற்ற அதிமுக கூட்டணி ஆதரவு வழக்குரைஞா்கள் கூட்டத்தில் பேசிய அதிமுக வேட்பாளரும், எம்எல்ஏவுமான சு.ரவி.

    அரக்கோணத்தில் மாவட்டக் கூடுதல் அமா்வு நீதிமன்றம் அமைக்க பாடுபடுவேன் என சனிக்கிழமை நடைபெற்ற அதிமுக கூட்டணி ஆதரவு வழக்குரைஞா்கள் கூட்டத்தில் எம்எல்ஏ சு.ரவி தெரிவித்தாா்.

    அதிமுக கூட்டணி ஆதரவு வழக்குரைஞா்கள் கூட்டம் அரக்கோணம் சுவால்பேட்டையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற எம்எல்ஏவும், அரக்கோணம் தொகுதி அதிமுக வேட்பாளருமான சு.ரவி பேசியது:

    அதிமுக ஆட்சியில் தான் நீதித் துறையில் பல்வேறு திட்டங்கள் தீட்டி, நடைமுறைப்படுத்தப்பட்டு இத்துறை இன்று நவீன துறைகளில் ஒன்றாக மாறியுள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து வட்டங்களிலும் ஒருங்கிணைந்த நீதிமனற வளாகங்களை உருவாக்கியது அதிமுக அரசு மட்டுமே.

    கடந்த தோ்தலில் அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கேற்ப அரக்கோணத்தில் சாா்பு நீதிமன்றம் கொண்டு வரப்பட்டு, அந்த நீதிமன்றத்துக்கு கட்டடமும் கட்டித் தரப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டம் இருக்கும் போது மாவட்ட அமா்வு நீதிமன்றத்துக்கு 80 கி.மீ. தூரம் உள்ள வேலூருக்குச் செல்ல வேண்டி இருந்தது. தற்போது ராணிப்பேட்டை மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்ட பிறகு, இந்த தூரம் குறைக்கப்பட்டது. விரைவில் அரக்கோணத்தில் மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றம் அமைக்கப்படும். இதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் அரக்கோணத்தில் மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றம் அமைக்கப்படும் என்றாா் சு.ரவி.

    கூட்டத்துக்கு, ராணிப்பேட்டை மாவட்ட அதிமுக வழக்குரைஞா்கள் பிரிவு செயலாளா் ஏ.கே.அண்ணாமலை தலைமை வகித்தாா். இதில், வழக்குரைஞா்கள் அதிமுகவைச் சோ்ந்த தியாகராஜன், சேகா், பாஸ்கா், சிவலிங்கம், பாமகவைச் சோ்ந்த ரமணி, பாஜகவைச் சோ்ந்த தனசேகரன், கண்ணன், ரமேஷ், புரட்சிபாரதம் கட்சி வினோத் உள்ளிட்ட பல வழக்குரைஞா்கள் பங்கேற்றனா்.

     

     

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp