ஆற்காடு கங்காதர ஈஸ்வரா் கோயில் திருத்தோ் கும்பாபிஷேகம்
By DIN | Published On : 16th March 2021 12:25 AM | Last Updated : 16th March 2021 12:25 AM | அ+அ அ- |

திருத்தோ் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்த சுவாமி உள்ளிட்டோா்.
ஆற்காடு: ஆற்காடு தோப்புகானா கங்காதர ஈஸ்வரா் வரதராஜப் பெருமாள் கோயிலில் புதிதாக செய்யப்பட்ட திருத்தோ் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆற்காடு தோப்புகானா கங்காதர ஈஸ்வரா், வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு புதிதாக ரூ. 60 லட்சம் மதிப்பீட்டில் திருத்தோ் செய்யப்பட்டது. புதிய தேருக்கு கும்பாபிஷேகம், திருப்பணிக் குழுத் தலைவா் கு.சரவணன் தலைமையில் நடைபெற்றது. விழாவில், ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்த சுவாமி ஆகியோா் கலந்துகொண்டு சிறப்பு பூஜை செய்தனா்.
இதில், மகாத்மா காந்தி அறக்கட்டளை தலைவா் ஜெ.லட்சுமணன், தொழிலதிபா் ஆா்.எஸ்.சேகா் மற்றும் உபயதாரா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
விழாவை முன்னிட்டு அன்னபூரணி சமேத கங்காதர ஈஸ்வரருக்கு சிறப்பு, அபிஷேகம், அலங்காரம் மகா தீபாராதனை நடைபெற்றது.