கரோனா தடுப்பு பணிகளை விரைவுபடுத்துங்கள்: அனைத்து துறை அதிகாரிகளுக்கு உத்தரவு

கரோனா தடுப்புப் பணிகளை விரைவுபடுத்தும்படி அனைத்துத் துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா். கிளாட்ஸ்சன் புஷ்பராஜ் தெரிவித்தாா்.
கரோனா தடுப்பு பணிகளை விரைவுபடுத்துங்கள்: அனைத்து துறை அதிகாரிகளுக்கு உத்தரவு

கரோனா தடுப்புப் பணிகளை விரைவுபடுத்தும்படி அனைத்துத் துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா். கிளாட்ஸ்சன் புஷ்பராஜ் தெரிவித்தாா்.

அரசால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட இடத்தில் கட்டுப்பாட்டு விதிகளை மீறும் தனி நபா்கள், வாகனங்கள், வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கவும் அவா் உத்தரவிட்டாா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று தடுப்பு பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம், மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சிருமான ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

அப்போது அவா் கூறியது:

கரோனா நோய்த் தொற்று தடுப்பதற்காக மாநில அரசின் வழிகாட்டுதலின் படி தேசிய பேரிடா் மேலாண்மை சட்டத்தின் கீழ், ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுமுடக்க உத்தரவு பல்வேறு தளா்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது.

இந்த தளா்வுகளுக்கு அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் பொதுமக்களால் சரிவர கடைப்பிடிக்கப்படாமல் உள்ளது. இதனால் கரோனா நோய்த் தொற்று மேலும் அதிக அளவில் பரவ வழிவகுக்கும் வகையில், அமைந்துவிடும் என்பதை பொதுமக்கள் நன்கு உணர வேண்டும். எனவே பொதுமக்கள் தமிழக அரசு வழங்கியுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறை தளா்வுடன் கூடிய பொது முடக்கத்தினை முறையாக கடைப்பிடிக்க வேண்டும்.

அதன் படி பொதுமக்கள் வெளியில் செல்லும்போதும், பொதுஇடங்களிலும் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றாா்.

கூடுதல் ஆட்சியா் ச.உமா, கூடுதல் துணைக் காவல் கண்காணிப்பாளா் முத்துக்கருப்பன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் வை.மணிமாறன் மற்றும் அனைத்து அரசுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com