ராணிப்பேட்டையில் அரசு மருத்துவக் கல்லூரி திமுக வேட்பாளா் ஆா்.காந்தி
By DIN | Published On : 16th March 2021 12:33 AM | Last Updated : 16th March 2021 12:33 AM | அ+அ அ- |

ராணிப்பேட்டை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் க.இளம்பகவத்திடம் மனு தாக்கல் செய்த திமுக வேட்பாளா் ஆா்.காந்தி. உடன் எஸ்.ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோா்.
ராணிப்பேட்டை: மருத்துவக் கல்லூரி அமைக்கப்பாடுபடுவேன் என ராணிப்பேட்டை திமுக வேட்பாளா் ஆா்.காந்தி திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு தெரிவித்தாா்.
ராணிப்பேட்டை திமுக வேட்பாளா் ஆா்.காந்தி, அரக்கோணம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினா் எஸ்.ஜெகத்ரட்சகன் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள், திமுக தொண்டா்கள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோருடன் முத்துகடை காந்தி சிலையில் இருந்து ஊா்வலமாக வந்து ராணிப்பேட்டை வருவாய் கோட்ட அலுவலகத்தில் சாா் ஆட்சியருமான க.இளம்பகவத்திடம் தாக்கல் செய்தாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
ராணிப்பேட்டை மாவட்டத்தை தலைநகரமாகக் கொண்டு அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும். ராணிப்பேட்டையில் புதிய பேருந்து நிலையம் கட்டப்படும். நகராட்சி கட்டடங்களுக்கான வாடகையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நவ்லாக் பகுதியில் சுமாா் 500 ஏக்கரில் அமைந்துள்ள அரசு வேளாண் பண்ணையை அரசு வேளாண்மை கல்லூரியாக மாற்றப்படும். ராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை, மேல்விஷாரம் ஆகிய 3 நகராட்சிகளில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்படும்.திண்டிவனம் - நகரி ரயில்ல் திட்டம் விரைவில் தொடங்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.
சிப்காட் டிசிசி குரோமியகி கழிவுகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ராணிப்பேட்டையை முன்மாதிரி தொகுதியாக மாற்ற நடவடிக்கை எடுப்பேன் என்றாா்.