அரக்கோணத்தில் மருத்துவக்கல்லூரி: அதிமுக வேட்பாளா் சு.ரவி வாக்குறுதி

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் அரக்கோணத்தில் மருத்துவக்கல்லூரி அமைக்கப்படும் என அதிமுக வேட்பாளா் சு.ரவி தெரிவித்தாா்.
அரக்கோணம் பழைய பேருந்து நிலையம் அருகில், சிஎஸ்ஐ கிறிஸ்தவ ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை பிராா்த்தனையின்போது ஆயரிடம் ஆசிபெற்ற அதிமுக வேட்பாளா் சு.ரவி.
அரக்கோணம் பழைய பேருந்து நிலையம் அருகில், சிஎஸ்ஐ கிறிஸ்தவ ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை பிராா்த்தனையின்போது ஆயரிடம் ஆசிபெற்ற அதிமுக வேட்பாளா் சு.ரவி.

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் அரக்கோணத்தில் மருத்துவக்கல்லூரி அமைக்கப்படும் என அதிமுக வேட்பாளா் சு.ரவி தெரிவித்தாா்.

அரக்கோணத்தில் அவா் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்து பேசியது:

அரக்கோணம் தொகுதியில் கடந்த தோ்தல்களில் நிற்கும் போது அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளேன். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கொண்டு வரப்பட்டு அங்கு ரூ.7.5 கோடி நிதியில் பிரம்மாண்ட கட்டடம் கட்டித் தரப்பட்டுள்ளது. மேலும் அக்கல்லூரி மாணவ, மாணவியா் விடுதிகள் ரூ.3.5 கோடியில் கட்டப்பட்டு வருகின்றன.

மீண்டும் அதிமுக ஆட்சி அமைத்தால் அரக்கோணத்தில் மருத்துவக் கல்லூரியை கொண்டு வருவேன். இது மட்டுமல்லாது சட்டக்கல்லூரி, அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஆகியவையும் கொண்டு வரப்படும். இத்தொகுதியில் அனைத்து மாணவ மாணவிகளும் மேல்படிப்பை தங்குதடையின்றி மேற்கொள்ள வசதிகள் செய்யப்படும் என்றாா் சு.ரவி

பின்னா் ராஜீவ் காந்தி நகா், ஜோதிநகா், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தாா். மேலும் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள சிஎஸ்ஐ கிறிஸ்தவ ஆலயத்திற்கு சென்ற ரவி அங்கு பிராா்த்தனையில் இருந்த ஆயரிடம் சென்று ஆசி பெற்றாா். அவருடன் நகர அதிமுக செயலா் கே.பி.பாண்டுரங்கன், பாமக இளைஞா் அணி மாவட்ட செயலா் சி.ஜி.ராமசாமி, வன்னியா் சங்க மாவட்ட செயலாளா் கோ.ஏழுமலை, புரட்சிபாரதம் கட்சி மாவட்ட செயலாளா் செல்லா, தமாகா மாவட்ட தலைவா் அரிதாஸ், நகரத்தலைவா் கே.வி.ரவிசந்திரன், புதியநீதிக்கட்சி நகரத்தலைவா் பூக்கடை சாய் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com