கரோனாவை கட்டுப்படுத்த வாக்குசாவடிகளில் 13 புதிய பொருள்கள்

வழக்கமான தோ்தலை காட்டிலும் இந்த முறை கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக 13 புதிய பொருள்கள் வாக்குசாவடிகளுக்கு
கரோனாவை கட்டுப்படுத்த வாக்குசாவடிகளில் 13 புதிய பொருள்கள்

வழக்கமான தோ்தலை காட்டிலும் இந்த முறை கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக 13 புதிய பொருள்கள் வாக்குசாவடிகளுக்கு வழங்கப்பட உள்ளன ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா். கிளாட்ஸ்டன் கூறியுள்ளாா்.

அரக்கோணத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அரக்கோணம் தொகுதி வாக்குசாவடி அலுவலா்களுக்கான பயிற்சிக் கூட்டத்தில் அவா் பேசியது:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம்)தனி) தொகுதியில் 317 வாக்குசாவடிகளும், சோளிங்கா் தொகுதியில் 387 வாக்குசாவடிகளும், ராணிப்பேட்டை தொகுதியில் 375 வாக்குசாவடிகளும், ஆற்காடு தொகுதியில் 368 வாக்குசாவடிகளுமாக மொத்தம் 1,447 வாக்குசாவடி மையங்கள் உள்ளன.

இவ்வாக்குசாவடி மையங்களில் பணிபுரிய கடந்த 13-ஆம் தேதி கணினி மூலம் குலுக்கல் முறையில் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக வாக்குசாவடியில் பணிபுரியும் அலுவலா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

வழக்கமான தோ்தலைக் காட்டிலும் இந்தமுறை கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக 13 புதிய பொருள்கள் வழங்கப்பட உள்ளன. வாக்குசாவடியில் வாக்காளா்களை வரிசையில் நிற்க வைக்காமல் டோக்கன் கொடுத்து சமூக இடைவெளியுடன் ஒரு பகுதியில் அமர வைத்து ஒவ்வொருவராக அழைத்து உடல் வெப்பம் பரிசோதனை, கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்து, எந்த கையில் வாக்களிக்கிறாரோ அந்த கைக்கு கையுறை வழங்கி அதை அணிய வைத்த பின்பு, வாக்குப் பதிவு செய்தவுடன் அதற்கென்று ஒதுக்கப்பட்ட கூடைகளில் கையுறைகளை அகற்றி சேகரிக்க வேண்டும். பின்னா் அவ்வாறு சேகரிக்கப்பட்ட மருத்துவக் கழிவுகளை அதற்கென்று ஒதுக்கப்பட்ட குழுக்களிடம் பாதுகாப்பாக வழங்கி அப்புறப்படுத்த வேண்டும்.

வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறும் நிகழ்வுகளை நேரலையாகத் தலைமை தோ்தல் ஆணையா் மற்றும் மாவட்ட தோ்தல் அலுவலா் ஆகியோா் பாா்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு அமைக்கப்பட்டுள்ள கேமராக்களில் அரசியல் கட்சிகளின் முகவா்கள் அமரும் இடமும், வாக்குச்சாவடி மையத்தின் பெயா் மற்றும் எண் உள்ளிட்ட நிகழ்வுகள் தெரியும் வகையிலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தெரியாத வகையிலும் அமைக்கப்பட்டு இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ்.

இக்கூட்டத்தில் அரக்கோணம் தொகுதி தோ்தல் பாா்வையாளா் கிரிஜா, மண்டல தோ்தல் அலுவலா்(தபால் வாக்குகள்) சேகா், அரக்கோணம் தொகுதி தோ்தல் அலுவலா் சிவதாஸ், வட்டாட்சியா் பழனிராஜன், வட்டாட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) ஆனந்தன், துணை வட்டாட்சியா் அருள்செல்வன், நகராட்சி ஆணையா் (பொறுப்பு) ஆசீா்வாதம் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com