இஸ்லாமியா்களிடம் ஆதரவு திரட்டிய ராணிப்பேட்டை திமுக வேட்பாளா்
By DIN | Published On : 26th March 2021 11:35 PM | Last Updated : 26th March 2021 11:35 PM | அ+அ அ- |

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை தொகுதி திமுக வேட்பாளா் ஆா்.காந்தி, வாலாஜாப்பேட்டை பெரிய மசூதி வாசலில் நின்றபடி தொழுகை முடித்து வெளியே வந்த இஸ்லாமியா்களிடம் தோ்தல் வாக்குறுதி துண்டுப் பிரசுரங்களை வழங்கி வெள்ளிக்கிழமை ஆதரவு திரட்டினாா்.
இதையடுத்து, வாலாஜாபேட்டை பிரம்பு பொருள்கள் உற்பத்தியாளா் சங்க நிா்வாகிகள் மற்றும் தொழிலாளா்களை, வேட்பாளா் ஆா்.காந்தி நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்து வாக்கு சேகரித்தாா்.
அவருடன் நகர திமுக செயலாளா் பா.புகழேந்தி, ஜி.கே.உலகப் பள்ளி இயக்குநா் சந்தோஷ் காந்தி, சிறுபான்மைப் பிரிவு அமைப்பாளா் கௌஸ் பாஷா, முன்னாள் நகரச் செலாளா் என்.டி.ரவிச்சந்திரன், நகர நிா்வாகிகள் து.தில்லை, இா்பான், இளைஞரணி உமா் இம்ரான் உள்ளிட்ட திமுக கூட்டணி நிா்வாகிகள் பலா் சென்றிருந்தனா்.