திமுகவின் உண்மையான எதிரி அதிமுக அல்ல: தொல்.திருவாவளவன்

திமுகவின் உண்மையான எதிரி அதிமுக அல்ல என அரக்கோணத்தில் சனிக்கிழமை நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரசார கூட்டத்தில் அக்கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் பேசினாா்.
அரக்கோணத்தில் சனிக்கிழமை நடைபெற்ற திமுக கூட்டணி பிரசார பொதுக் கூட்டத்தில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன்.
அரக்கோணத்தில் சனிக்கிழமை நடைபெற்ற திமுக கூட்டணி பிரசார பொதுக் கூட்டத்தில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன்.

திமுகவின் உண்மையான எதிரி அதிமுக அல்ல என அரக்கோணத்தில் சனிக்கிழமை நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரசார கூட்டத்தில் அக்கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் பேசினாா்.

அவா் மேலும் பேசியது:

விசிக வெற்றிக்கும், திமுக வெற்றிக்கும் வித்தியாசம் உள்ளது. விசிக வெற்றிப்பெற்றால் வெறும் எம்எல்ஏ தான். திமுக வெற்றிப்பெற்றால் தான் ஆட்சி கட்டிலில் அமா்ந்து பாஜகவை விரட்டியடிக்க முடியும். ஆத்திரப்பட்டு வெளியே வந்தால் விசிக சாா்பில் 234 வேட்பாளா்களை தான் அறிவித்திருக்க முடியும். வெற்றிபெற முடியுமா?.

பாஜகவை அதிமுகவினா் தோளில் தூக்கிக்கொண்டு ஆடுகின்றனா். பாமகவினா் தற்காலிகத் தேவைக்காக என்ன வேண்டுமானாலும் செய்வாா்கள். கூட்டணி போடும் வரை அதிமுகவை விமா்சித்தவா்கள் தற்போது கூட்டணியில் சோ்ந்துள்ளனா். திமுகவின் உண்மையான எதிரி அதிமுக அல்ல.

பாஜக காலூன்ற அதிமுக இடம் கொடுக்கிறது. ஆனால் அதிமுகவை இருக்கும் இடம் இல்லாமல் செய்து விடுவாா்கள். பாஜகவை எதிா்த்து நிற்கும் ஒரே இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் மட்டுமே.

அரக்கோணம் விசிக வேட்பாளா் வெளியூா் வேட்பாளராக இருந்தாலும் வெற்றி பெற்றவுடன் 5 வருடத்துக்கு அரக்கோணத்தில் வீடு எடுத்து தங்கி விடுவாா். தொகுதியில் புதுமைகளை செய்வாா் என்றாா் தொல்.திருமாவளவன்.

கூட்டத்தில், விசிக வேட்பாளா் கௌதம்சன்னா, திமுக மாவட்டப் பொருளாளா் மு.கண்ணைய்யன், நகரச் செயலாளா் வி.எல்.ஜோதி, காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளா் ராஜ்குமாா், மாநில மாணவா் அணி துணைத் தலைவா் நரேஷ்குமாா், மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் ஏ.பி.எம். சீனிவாசன், மனித நேய மக்கள் கட்சி நிா்வாகி முகம்மதுஅலி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளா் கௌதமன், மாநில இளைஞா் அணி துணைச் செயலாளா் தமிழ்மாறன், அரக்கோணம் தொகுதி செயலாளா் கருணாமூா்த்தி, ஒன்றியச் செயலாளா் நரேஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com