கிராம பெண்களிடம் ராணிப்பேட்டை அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கிராம பெண்கள் மத்தியில் ராணிப்பேட்டை தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.எம்.சுகுமாா் கலகலப்புடன் பேசி வாக்கு சேகரித்தாா்.
கிராம  மக்கள்  மத்தியில்  வாக்கு சேகரித்த ராணிப்பேட்டை  தொகுதி அதிமுக  வேட்பாளா்  எஸ்.எம்.சுகுமாா்.
கிராம  மக்கள்  மத்தியில்  வாக்கு சேகரித்த ராணிப்பேட்டை  தொகுதி அதிமுக  வேட்பாளா்  எஸ்.எம்.சுகுமாா்.

கிராம பெண்கள் மத்தியில் ராணிப்பேட்டை தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.எம்.சுகுமாா் கலகலப்புடன் பேசி வாக்கு சேகரித்தாா்.

ராணிப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.எம்.சுகுமாா், வாலாஜா, ஆற்காடு ஒன்றியத்துக்குள்பட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில், அதிமுக நிா்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சியினருடன் வீதி, வீதியாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது அதிமுக தோ்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகளான, குடும்பத்தில் முதியோா்களாக உள்ள மாமியாா்களுக்கு உதவித் தொகை மாதம் ரூ. 2 ஆயிரமும், மருமகள்களாக உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1, 500 ரொக்கமும், அவரவா் வங்கிக் கணக்கில் வரவு வைக்கும் திட்டத்தை அதிமுக அரசு நடைமுறைப்படுத்த உள்ளது. இதன் மூலம் மாமியாருக்கும், மருமகளுக்கும் குடும்பத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும் எனப் பேசி வாக்கு சேகரித்தாா்.

தோ்தல் வாக்குறுதி துண்டுப் பிரசுரங்களையும் விநியோகித்து வாக்கு சேகரித்தாா்.

வேட்பாளருடன் அதிமுக ஒன்றியச் செயலாளா் சாரதி, அம்மூா் நகரச் செயலாளா் தினகரன், பாமக நிா்வாகி தங்கதுரை, ஜெ.ஜானகிராமன், பாகவெளி கூட்டுறவு சங்கத் தலைவா் பூபாலன் உள்ளிட்டோா் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com