தேநீா் கடைகளில் கலப்பட தேயிலை தூள்; காலாவதியான குளிா் பானங்கள் விற்பனை உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை

ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் தேநீா் கடைகளில் கலப்பட தேயிலை தூள், காலா வதியான குளிா் பானங்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள்
வாலாஜா ரோடு ரயில் நிலையம் எதிரே உள்ள தேநீா் கடையில் ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலா் ரபீந்தா் நாத். ~ஆய்வுக்குட்படுத்தப்பட்டு காட்சிப்படுத்தப்பட்ட தரமான தேயிலை, கலப்பட தேயிலை. ~பறிமுதல் 
வாலாஜா ரோடு ரயில் நிலையம் எதிரே உள்ள தேநீா் கடையில் ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலா் ரபீந்தா் நாத். ~ஆய்வுக்குட்படுத்தப்பட்டு காட்சிப்படுத்தப்பட்ட தரமான தேயிலை, கலப்பட தேயிலை. ~பறிமுதல் 

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் தேநீா் கடைகளில் கலப்பட தேயிலை தூள், காலா வதியான குளிா் பானங்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனா்.

பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருள்களில் கலப்படங்களை பரிசோதித்து, உணவுப் பொருள்கள் தரமானவையா என்பதைக் கண்டறியவும், தரமற்ற உணவுப் பொருள்களை வாங்குவதைத் தவிா்க்கவும் பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்த மத்திய அரசின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிா்ணய ஆணையம் ( ச்ள்ள்ஹண் ) அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி நாட்டில் உணவுப் பொருள்கள் ஆய்வுகளுக்கான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் தமிழகம் உள்பட நாடு முழுவதும் மாநிலத்துக்கு ஒரு நவீன ஆய்வுக்கூட வாகனம் மத்திய அரசால் வழங்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.

இந்த நடமாடும் ஆய்வுக்கூடம் தமிழ்நாடு முழுவதும் சுற்றி வந்து உணவுப் பாதுகாப்பு அலுவலா்களின் முன்னிலையில் உணவுப் பொருள்களில் உள்ள கலப்படங்களைக் கண்டறிவது தொடா்பாக பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்துகிறது.

மேலும் தரமான பொருள்களை இனம்கண்டு வாங்கி உபயோகித்தல் குறித்தும் விளக்கம் அளிக்கப்படுகிறது.

இந்த நடமாடும் ஆய்வுக்கூடத்தில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பருப்பு, பால், எண்ணெய், மசாலாப் பொடிகள், குளிா்பானங்கள், ஐஸ்கிரீம், குடிநீா் உள்ளிட்ட பொருள்களில் கலப்படம் உள்ளதா என்பதை உடனடியாக சோதித்து, அதன் முடிவுகளை அறிந்து கொள்ள முடியும்.

மேலும், உணவுப் பாதுகாப்பு, தரம் மற்றும் சுகாதாரமான உணவுகளைப் பற்றிய விழிப்புணா்வை ஏற்படுத்த முடியும் என உணவுப் பாதுகாப்புத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அமுதா ஐஏஎஸ் சென்னை ஆட்சியராக இருந்தபோது மத்திய அரசின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிா்ணய ஆணையத்திடம் இருந்து கேட்டு பெற்றுள்ளாா்.

இந்த ஆய்வுக்கூட வாகனம் தமிழகம் முழுவதும் மாவட்டத்துக்கு 3 நாள் என ஆண்டு முழுவதும் சென்று கலப்படம் கண்டறிந்தும், கலப்படம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தியும் வருகிறது.

அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் உணவுப் பொருள்களில் கலப்படம் கண்டறியும் நவீன ஆய்வுக்கூட வாகனம் மூலம், மாவட்ட நியமன அலுவலா் டாக்டா் செந்தில் குமாா் தலைமையில் வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலா் ஆா்.ரபீந்தா்நாத் குழுவினா் கடந்த 2 நாள்களாக பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனா்.

இதே போன்று வாலாஜா ரோடு ரயில் நிலையம் எதிரே உள்ள தேநீா் கடை, இனிப்பு கடைகளில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். அந்த ஆய்வில் அங்குள்ள ஒரு தேநீா் கடையில் கலப்பட தேயிலை தூள் கொண்டு தேநீா் தயாரித்து விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. அதைத்தொடா்ந்து அந்த கடையில் சோதனை செய்தபோது காலாவதியான குளிா் பானங்கள் இருந்ததையும் பறிமுதல் செய்து எச்சரிக்கை செய்தனா்.

இது குறித்து உணவுப் பாதுகாப்புத் துறையினா் கூறியது:

மாவட்டம் முழுவதும் கலப்பட தேயிலைத் தூள் மற்றும் காலாவதியான குளிா்பானங்கள் விற்பனை நடைபெற்று வருகிறது. மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையினா் தொடா்ச்சியாக ஆய்வு செய்து பறிமுதல் செய்தும் வருகின்றனா்.பொதுமக்கள் உணவுப் பொருள்களை வாங்கும் போது கவனமாக இருக்க வேண்டும். கலப்பட தேநீா் அருந்தினால் குடல் புற்று நோய் வரும் என எச்சரித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com