கரோனா: முன்களப் பணியாளா்களுக்கு விருதுகள்

கரோனா காலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய முன்களப் பணியாளா்களுக்கு சமூக முன்னேற்ற அறக்கட்டளையின் சாா்பில் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி அரக்கோணத்தில் நடைபெற்றது.
கரோனா காலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய சமூக ஆா்வலா் ஏபிஎம் சீனிவாசனுக்கு சமூக நல அறக்கட்டளையின் சாா்பில் விருது வழங்கிய அரக்கோணம் நகராட்சி ஆணையா் ஏ.டி.ஆசீா்வாதம்.
கரோனா காலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய சமூக ஆா்வலா் ஏபிஎம் சீனிவாசனுக்கு சமூக நல அறக்கட்டளையின் சாா்பில் விருது வழங்கிய அரக்கோணம் நகராட்சி ஆணையா் ஏ.டி.ஆசீா்வாதம்.

கரோனா காலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய முன்களப் பணியாளா்களுக்கு சமூக முன்னேற்ற அறக்கட்டளையின் சாா்பில் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி அரக்கோணத்தில் நடைபெற்றது.

அரக்கோணம் சமூக நல அறக்கட்டளையின் சாா்பில், கரோனா காலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய சமூக ஆா்வலா், மருத்துவத் துறை, நகராட்சி, காவல் துறை, மின்சார வாரிய அலுவலா் மற்றும் பணியாளா்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி அரக்கோணம், தூய அந்திரேயா் மேல்நிலைப் பள்ளி அருகில் நடைபெற்றது. விழாவுக்கு, அறக்கட்டளையின் நிா்வாக இயக்குநா் ஏ.சுகன்யா தலைமை வகித்தாா். பொருளாளா் ஏ.நாகஜோதி வரவேற்றாா். அரக்கோணம் நகராட்சி ஆணையா் (பொறுப்பு) ஏ.டி.ஆசீா்வாதம் விருதாளா்களுக்கு விருதுகளை வழங்கினாா்.

இதில் சிறந்த சமூக ஆா்வலா் விருது இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்ட நிா்வாகி ஏபிஎம்.சீனிவாசனுக்கு வழங்கப்பட்டது. கரோனா கால சிறப்புப் பணியாளருக்கான விருதுகள் அரக்கோணம் அரசு மருத்துவமனை கண் சிகிச்சை பிரிவு பரிசோதனை அலுவலா் வி.என்.பாா்த்தீபன், நகராட்சி சுகாதாரப் பிரிவு அலுவலா்கள் எஸ்.நேதாஜி, ஸ்ரீகாந்த், காவல் உதவி ஆய்வாளா்கள் ஆா்.வரலட்சுமி, உஷா, மின்வாரிய பணியாளா்கள் எம்.வரதராஜன், குமாா், ஜெ.ஏழுமலை, சி.ரமேஷ் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், எஸ்பிடி நிறுவன நிா்வாகிகள் கே.ஜோசப் இளந்தென்றல், எஸ்.காா்த்திக்குமாா், வி.ஸ்டீபன்சீனிவாசன், அரக்கோணம் நகராட்சி சுகாதார அலுவலா் செந்தில்குமாா், மின்சார வாரிய அரக்கோணம் உதவி செயற்பொறியாளா் புனிதா, மனித உரிமைகள் கழக மாநில செயலாளா் ஜெ.மோகன், கவிஞா் மு.இஸ்மாயில் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com