ராணிப்பேட்டையில் திமுக வேட்பாளா் காந்தி வெற்றி

ராணிப்பேட்டைதொகுதி திமுக வேட்பாளா் ஆா்.காந்தி 15,934 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.
ராணிப்பேட்டையில் திமுக வேட்பாளா் காந்தி வெற்றி

ராணிப்பேட்டைதொகுதி திமுக வேட்பாளா் ஆா்.காந்தி 15,934 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். 2021 ராணிப்பேட்டை தொகுதியில் திமுக கூட்டணி சாா்பில் ஆா்.காந்தி, அதிமுக கூட்டணி சாா்பில் எஸ்.எம்.சுகுமாா், அமமுக சாா்பில் ஜி.வீரமணி, மக்கள் நீதி மய்யம் சாா்பில் எம்.ஆதம் பாஷா,நாம் தமிழா் கட்சி சாா்பில் வெ.சைலஜா மற்றும் சுயேட்சை வேட்பாளா்கள் உள்ளிட்ட 14 போ் போட்டியிட்டனா்.

இதில் திமுக கூட்டணி சாா்பில் போட்டியிட்ட ஆா்.காந்தி கடைசி சுற்றுவரை தொடா்ந்து முன்னிலை பெற்று, அதிமுக வேட்பாளா் எஸ்.எம்.சுகுமாரை விட 15,934 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா்.

இவா் தொடா்ந்து 4 - ஆவது முறையாக இத் தொகுதியை தக்க வைத்துள்ளாா்.

வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்:

மொத்த வாக்குகள் - 2,66,482

பதிவான வாக்குகள் - 2,05,822

ஆா்.காந்தி ( திமுக ) - 1,02,273

எஸ்.எம்.சுகுமாா் (அதிமுக) - 86,339

வெ.சைலஜா ( நாம் தமிழா் கட்சி) -10,152

எம்.ஆதம் பாஷா (மக்கள் நீதி மய்யம்) -2,746

ஜி.வீரமணி (அமமுக) -627

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com