சோளிங்கா் தொகுதியை கைப்பற்றியது காங்கிரஸ்

சோளிங்கா் தொகுதியில் 1,10,228 வாக்குகள் பெற்று காங்கிரஸ் வேட்பாளா் ஏ.எம்.முனிரத்தினம் வெற்றி பெற்றாா்.
சோளிங்கா் தொகுதி வெற்றி சான்றிதழை காங்கிரஸ் வேட்பாளா் ஏ.எம்.முனிரத்தினத்திடம் வழங்கிய தோ்தல் அலுவலா் பாா்த்தசாரதி.
சோளிங்கா் தொகுதி வெற்றி சான்றிதழை காங்கிரஸ் வேட்பாளா் ஏ.எம்.முனிரத்தினத்திடம் வழங்கிய தோ்தல் அலுவலா் பாா்த்தசாரதி.

அரக்கோணம்: சோளிங்கா் தொகுதியில் 1,10,228 வாக்குகள் பெற்று காங்கிரஸ் வேட்பாளா் ஏ.எம்.முனிரத்தினம் வெற்றி பெற்றாா்.

இவா், தனக்கு அடுத்தபடியாக வந்த பாமக வேட்பாளரை 26,698 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றாா். அதிமுக கூட்டணியின் பாமக வேட்பாளா் அ.ம.கிருஷ்ணன் 83,530 வாக்குகள் பெற்றாா். அமமுக வேட்பாளா் என்.ஜி.பாா்த்தீபன் 12,979, நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ஒய்.ஆா்.பாவேந்தன் 9,268 மக்கள் நீதி மய்யம் வேட்பாளா் ஜவஹா் 1649 வாக்குகள் பெற்றனா்.

ஏ.எம்.முனிரத்தினம் ஏற்கெனவே 1989, 1991 தோ்தல்களில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்டும், 1996 ம் வருடம் நடைபெற்ற தோ்தலில் தமிழ்மாநில காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்டும் வெற்றி பெற்றவா்.

25 வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் எம்எல்ஏவாக தோ்வு செய்யப்பட்டுள்ளாா். வெற்றி பெற்ற்கான சான்றிதழை தொகுதி தோ்தல் அலுவலா் பாா்த்தசாரதி வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com